தூத்துக்குடி: மருத்துவ அலட்சியத்தால் விபத்தில் சிக்கிய தொழிலாளி உயிரிழப்பு? - விசாரணை கோரி சட்ட உரிமைகள் கழகம் கண்டனம்

தூத்துக்குடி: மருத்துவ அலட்சியத்தால் விபத்தில் சிக்கிய தொழிலாளி உயிரிழப்பு? - விசாரணை கோரி சட்ட உரிமைகள் கழகம் கண்டனம்

தூத்துக்குடி: மருத்துவ அலட்சியத்தால் விபத்தில் சிக்கிய தொழிலாளி உயிரிழப்பு? - விசாரணை கோரி சட்ட உரிமைகள் கழகம் கண்டனம்

தூத்துக்குடி, நவ.10:

தூத்துக்குடியில் விபத்தில் படுகாயமடைந்த தொழிலாளி, அரசு மருத்துவமனையில் மருத்துவ அலட்சியத்தால் உயிரிழந்ததாக குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இச்சம்பவம் குறித்து சட்ட உரிமைகள் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

புவனேஸ்வரி டிரேடர்ஸ் நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணியாற்றி வந்த செந்தில் (43), கடந்த நவம்பர் 5-ஆம் தேதி சிப்காட் பைபாஸ் சாலையில் நடந்த விபத்தில் படுகாயமடைந்தார். அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

குடும்பத்தினர் கூறுகையில், செந்தில் பொது வார்டுக்கு மாற்றப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில், திடீரென கல்லீரல் மற்றும் மண்ணீரல் பாதிப்பு இருப்பதாகக் கூறி அவசர அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக தெரிவித்தனர். இந்த தீவிர அறுவை சிகிச்சையை மூத்த மருத்துவர்கள் முன்னின்று நடத்தாமல், 3 ஆண்டுகள் மட்டுமே அனுபவமுள்ள உதவி மருத்துவரைக் கொண்டு நடத்தியதே மரணத்திற்கு காரணம் என குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும், செந்தில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தபோது அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், விபத்தை ஏற்படுத்திய அடையாளம் தெரியாத வாகனத்தை கண்டறிய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

உண்மையான காரணங்கள் கண்டறியப்படும் வரை உடலை பிரேத பரிசோதனை செய்யவோ, வாங்கவோ போவதில்லை என குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். இந்த முடிவிற்கு சட்ட உரிமைகள் கழகம் முழு ஆதரவு தெரிவித்துள்ளது.

*சட்ட உரிமைகள் கழகத்தின் கோரிக்கைகள்:*

*1.* செந்திலின் மரணம் குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மருத்துவத்துறை உயர்மட்ட அதிகாரிகள் முன்னிலையில் சிறப்பு மருத்துவ குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும்.

*2.* விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை விரைந்து கண்டறிந்து, விபத்தின் பின்னணியை வெளிப்படையாக விசாரித்து குடும்பத்தினரின் சந்தேகங்களை போக்க வேண்டும்.

*3.* உயிரிழந்த செந்திலின் குடும்பத்திற்கு புவனேஸ்வரி டிரேடர்ஸ் நிறுவனமும், தமிழக அரசும் உடனடியாக உரிய நிதியுதவி மற்றும் இழப்பீடு வழங்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கிடைக்கும் வரை தார்மீக ரீதியாகவும், சட்டப்பூர்வமாகவும் துணை நிற்போம் என சட்ட உரிமைகள் கழகத்தின் நிறுவனத் தலைவர் Dr. S.R. செல்வம் கிறிஸ்டோபர் தெரிவித்துள்ளார்.