காவல் நிலைய சில்லறை செலவின நிதி ரூ.71 கோடியாக உயர்வு - தமிழக அரசு அரசாணை!

காவல் நிலைய சில்லறை செலவின நிதி ரூ.71 கோடியாக உயர்வு - தமிழக அரசு அரசாணை!

காவல் நிலைய சில்லறை செலவின நிதி ரூ.71 கோடியாக உயர்வு - தமிழக அரசு அரசாணை!

சென்னை:

தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் அன்றாடம் ஏற்படும் முறையான செலவுகளை எதிர்கொள்வதற்காக வழங்கப்படும் நிர்வாக செலவு நிதியை (எதிர்பாராத செலவு நிதி) தமிழக அரசு பல மடங்கு உயர்த்தி வழங்கியுள்ளது. இதற்காக *ரூ.71 கோடி* நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு சட்டம் ஒழுங்கை சிறப்பாக பராமரித்து, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழலை அமைத்து, பொது அமைதியை நிலைநிறுத்துவதை முக்கிய நோக்கமாக கொண்டுள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழ்நாடு காவல்துறை குற்றங்களை தடுத்தல் மற்றும் கண்டறிதல், போதை பொருளற்ற சமூகத்தை உருவாக்குதல், சைபர் குற்றங்களை எதிர்கொள்ளுதல் மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுதல் ஆகியவற்றில் முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது. எனவே காவல்துறையின் நிர்வாக மற்றும் செயலாக்க பணிகள் அதிகரித்து வரும் சூழலில் இதற்கான செலவினமும் கணிசமாக அதிகரித்துள்ளது.

எவ்வளவு உயர்வு? :

காவல் நிலையங்கள் குற்ற எண்ணிக்கைக்கு ஏற்ப 3 வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில்:

- மாதம் ரூ.3,750 வழங்கப்பட்டு வந்த காவல் நிலையங்களுக்கு *ரூ.30,000 ஆக உயர்வு*

- மாதம் ரூ.6,000 வழங்கப்பட்டு வந்த காவல் நிலையங்களுக்கு *ரூ.40,000 ஆக உயர்வு*

- மாதம் ரூ.8,250 வழங்கப்பட்டு வந்த காவல் நிலையங்களுக்கு *ரூ.50,000 ஆக உயர்வு*

*முக்கிய நோக்கம் - லஞ்சம் ஒழிப்பு:*

சில்லறை செலவின நிதியை உயர்த்தி வழங்குவதன் மூலம், காவல் நிலையங்களுக்கான நிர்வாக செலவினங்களை எதிர்கொள்வதில் ஏற்படும் அதிகாரப்பூர்வமற்ற ஆதாரங்களை தடுத்து, *லஞ்சமற்ற அரசு அலுவலகங்களை உருவாக்க* வழிவகை செய்யும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

2026-27 ஆம் ஆண்டிற்கான காவல்துறை மானிய கோரிக்கையின் போது தமிழக முதலமைச்சர் அறிவித்தபடி இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.