முத்தையாபுரம் பகுதி பொதுமக்கள் சந்தித்து கோரிக்கை. உடனடியாக பணிகளை துவக்கிய மேயா் ஜெகன் பொியசாமிக்கு பாராட்டு
முத்தையாபுரம் பகுதி பொதுமக்கள் சந்தித்து கோரிக்கை. உடனடியாக பணிகளை துவக்கிய மேயா் ஜெகன் பொியசாமிக்கு பாராட்டு
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட உப்பாத்து ஓடை முதல் முத்தையாபுரம் வரை ரோட்டில் இருபுறமும் அதிக அளவில் மணல் தேங்கி இருப்பதால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். அடிக்கடி விபத்து ஏற்படுகிறது அதன் மூலம் உயிர் பலி ஏற்படுகிறது அதுபோல பல்வேறு கோரிக்கைகளுடன் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமியை முத்தையாபுரம் ஊர் கமிட்டி மற்றும் பொதுமக்கள் சந்தித்து கோரிக்கை வைத்தனர். கோரிக்க வைத்த உடனே அதிகாரிகளிடம் பணிகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு உத்தரவிட்டார் அதன்போில் ரோட்டின் சாலை ஓரங்களில் உள்ள மணல்கள் அப்புறப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி உப்பாற்று ஓடை முதல் முத்தையாபுரம் வரை ஆய்வு மேற்கொண்டார். அப்போது முத்தையாபுரம் ஊர் கமிட்டி மற்றும் பொதுமக்கள் சார்பாக மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமிக்கு பொன்னாடை அணிவித்து நன்றி தெரிவித்தனர். ஊர் பொதுமக்களுடன் என்னென்ன பணிகள் செய்ய வேண்டும் என்று கேட்டார். அப்போது பொதுமக்கள் மற்றும் ஊர் கமிட்டியினா் தங்களுடைய கோரிக்கைகளை தெரிவித்தனர். உடனடியாக உங்கள் கோரிக்கை அனைத்தும் நிறைவேற்றி தருவேன் தற்போது சாலைகளில் இரு புறமும் உள்ள மணல்கள் அப்புறப்படுத்தப்படுகிறது ஒரு வார காலத்தில் இந்தபகுதி முழுவதும் மணல் அப்புறப்படுத்தப்பட்டு விடும் உங்களது கோரிக்கையின்படி இரண்டு இடத்தில் வேகத்தடை அமைத்து தருகிறேன் அது போல தேவையில்லாத இடத்தில் கனரக வாகனங்கள் லாரிகள் திரும்புவதை தடுக்கும் வகையில் உடனடியாக தடுப்பு அமைக்கப்படும். அதுபோல ஐந்து இடங்களில் உயர்கோபுரம் னஹமாக்ஸ் லைட் அமைக்கப்படும் சொன்தை செய்வேன், செய்வதை சொல்வேன், என் பதவி காலம் முழுவதும் மக்களுக்காக பணிசெய்வேன் நான் ாீல்ஸ் நிா்வாகம் நடத்தவில்லை. ாியல் நிா்வாகம் நடத்துகிறோம் என்று ஊர் கமிட்டி மற்றும் முத்தையாபுரம் பொதுமக்களிடம் தெரிவித்தார்.
இதுபற்றி முத்தையாபுரம் பொதுமக்கள் மற்றும் ஊர் கமிட்டி சார்பில் மஜீத் கூறுகையில் நாங்கள் மாநகராட்சி மேயர் ஜெகன் ெபாியசாமியை அலுவலகத்தில் நேரில் சந்தித்து சில கோரிக்கைகளை வைத்தோம் கோரிக்கை வைத்த இரண்டு மணி நேரத்தில் பணிகள் துவங்கியது. உடனடியாக மேயர் ஜெகன் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டு என்னென்ன பணிகள் செய்ய வேண்டும் என்று எங்களிடம் கேட்டறிந்தார் நாங்கள் கோரிக்கைகளை என்னென்ன செய்ய வேண்டும் என்று எடுத்து கூறினோம். அதன்படி அந்தந்த பகுதிகளை நேரில் வந்து பார்வையிட்டார் அதன்படி உடனடியாக சாலைகளில் இருபுறமும் உள்ள மணல்கள் முழுவதும் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது அதுபோல வேகத்தடை உடனடியாக அமைத்து தருகிறேன் என்று கூறியுள்ளார் தேவையில்லாத இடங்களில் லாரிகள் திரும்புவதால் பல விபத்துகள் ஏற்படுகிறது என்று கூறினோம் அந்த இடங்களில் தடுப்பு அமைத்து வாகனங்கள் திரும்பாதவாறு நடவடிக்கை எடுத்து உடனடியாக அமைத்து தருகிறேன் என்று கூறினார் நாங்கள் கோரிக்கை வைத்த 24 மணி நேரத்திற்குள் எங்கள் பகுதியை நேரில் வந்து பார்வையிட்டு பணிகளை துவக்கி உள்ளார். மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமிக்கு முத்தையாபுரம் ஊர் பொதுமக்கள் சார்பாக நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று மஜீத் தெரிவித்தார்.
ஆய்வின் போது கவுன்சிலா்கள் முத்துவேல் விஜயகுமாா், ராஜதுரை, திமுக பகுதி பொருளாளா் முத்துராஜா, சுகாதார ஆய்வாளா் ஸ்டாலின் பாக்கியநாதன், போல்பேட்டை பகுதி பிரதிநிதி ஜேஸ்பா், ஊர் கமிட்டி சார்பில் சந்தனராஜ். மஜீத், ரவி உள்பட ஊர் கமிட்டியினா் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.
tamilanda