வேட்பாளரை மாத்துங்க ஓட்டப்பிடாரம் அருகே ஒட்டநத்தத்தில் திமுகவினர் போர்க்கொடி

"Replace the Candidate!" — DMK Cadres Raise the Banner of Revolt at Ottanatham, Near Ottapidaram.

வேட்பாளரை மாத்துங்க ஓட்டப்பிடாரம் அருகே ஒட்டநத்தத்தில் திமுகவினர் போர்க்கொடி

ஓட்டப்பிடாரம் மார்ச் 29 : வேட்பாளரை மாத்துங்க ஓட்டப்பிடாரம் அருகே ஒட்டநத்தத்தில் திமுகவினர் போர்க்கொடி

வரும் ஏப்ரல் 23 அன்று நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற பொது தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை திமுக தலைவரும் தமிழக முதலமைச்சர் ஆன மு க ஸ்டாலின் சென்னையில் இன்று வெளியிட்டார். இதில் ஓட்டப்பிடாரம் தனி சட்டமன்ற தொகுதி வேட்பாளராக திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள தென்திருப்பேரை கல்லாம்பாறை பகுதியைச் சேர்ந்த தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக உள்ள ராமஜெயம் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் தொகுதிக்கு சம்பந்தமில்லாத நபரை ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக திமுக தலைமை அறிவித்துள்ளதை கண்டித்தும் ,திமுக வேட்பாளரை மாற்றி ஏற்கனவே இருமுறை ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று பல்வேறு மக்கள் நல திட்ட பணிகளை செயல்படுத்தி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி பொது மக்களிடம் செல்வாக்கு பெற்ற பெற்றவரே வேட்பாளராக வேட்பாளராக அறிவிக்காமல் தொகுதிக்கு சம்பந்தமில்லாத திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த ஒருவரை ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் வேட்பாளராக நிறுத்துவது எந்த விதத்தில் நியாயம் எனவே ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியின் மண்ணின் மைந்தராக உள்ள எம் சி சண்முகையாவை உடனடியாக வேட்பாளராக அறிவிக்க திமுக தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டுமென திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் திரண்டு வந்து போர் கொடி தூக்கியதால் திடீர் பரபரப்பு நிலவியது. மேலும் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியானது அதிமுக இரும்பு கோட்டையாக இருந்தது இந்த நிலையில் சுமார் 28 வருடங்களுக்கு பிறகு தனது கடினமான உழைப்பின் மூலம் கட்சியை வளர்த்து அதிமுகவின் கோட்டை என்பதை உடைத்து எறிந்து இரு முறை சட்டமன்ற உறுப்பினராகி நாள்தோறும் தொகுதியில் வலம் வந்து மக்களிடம் செல்வாக்கு பெற்ற சண்முகையா வை மீண்டும் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என கட்சியினர் திமுக தலைமைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர் .