தூத்துக்குடி தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அதிமுக வேட்பாளர் சி.த. செல்லப்பாண்டியன்.
AIADMK candidate C.T. Chellapandian offered prayers at the Teppakulam Mariamman Temple in Thoothukudi.
தூத்துக்குடி தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அதிமுக வேட்பாளர் சி.த. செல்லப்பாண்டியன்.
தூத்துக்குடி,ஏப்ரல்,1
தூத்துக்குடி மாநகரப் பகுதியில் உள்ள மிகவும் பழமையான மற்றும் பிரசித்தி பெற்ற தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில், தமிழக முன்னாள் அமைச்சரும், அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளரும், தூத்துக்குடி மாநகர் மாவட்ட செயலாளர்
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சி.த. செல்லப்பாண்டியன்.சாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்தினார்.
சிறப்பு வழிபாடு: கோவிலுக்கு வருகை தந்த அதிமுக வேட்பாளர் செல்லப்பாண்டியன் , அம்மனுக்கு நடைபெற்ற சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகளில் கலந்து கொண்டு வழிபாடு செய்தார்.
பிரசித்தி பெற்ற தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில், சாமி தரிசனம் செய்ய வந்த செல்லப்பாண்டியனுக்கு கூட்டணி கட்சியான பாஜக வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். மத்திய அரசு வழக்கறிஞர் சண்முகசுந்தரம் பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.
பக்தர்களுடன் சந்திப்பு: சாமி தரிசனம் செய்துவிட்டு அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் அதிமுக தொண்டர்களுடன் கலந்துரையாடி, அவர்களின் தேவைகளைக் கேட்டறிந்தார்.
இந்த நிகழ்வின்போது அதிமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் உடனிருந்தனர். இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது , இப்பகுதியில் மிகவும் புகழ்பெற்ற மாரியம்மன் கோவில் என்பது குறிப்பிடத்தக்கது.
tamilanda