தமிழக பாஜக மாநிலத் துணைத்தலைவர் கரு.நாகராஜன் மீது சென்னை கிழக்கு மாவட்ட மகளிர் அணித் தலைவரான ந.தங்கசோபனா பிரதமர் அலுவலகத்தில் பாலியல் புகார் அளித்துள்ளார்.
தமிழக பாஜக மாநிலத் துணைத்தலைவர் கரு.நாகராஜன் மீது சென்னை கிழக்கு மாவட்ட மகளிர் அணித் தலைவரான ந.தங்கசோபனா பிரதமர் அலுவலகத்தில் பாலியல் புகார் அளித்துள்ளார்.

2018 முதல் கட்சியில் இருக்கும் தன்னிடம், நள்ளிரவு நேரங்களில் போன் செய்து ஆபாசமாகப் பேசியதுடன், கட்சி அலுவலகமான 'கமலாலயத்தில்' தனியாக அழைத்து பாலியல் தொல்லை அளிக்க முயன்றதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், 2022 உள்ளாட்சித் தேர்தலில் தனக்குக் கிடைக்க வேண்டிய வாய்ப்பு கரு.நாகராஜனின் தலையீட்டால் பறிக்கப்பட்டதாகவும், இது குறித்து புகார் அளித்ததற்காக அவரும் அவரது ஆதரவாளர்களும் (ஸ்ரீதர், சீதாராமன்) தன்னை ஆபாசமாகப் பேசி மிரட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.
தன்னைப்போலப் பல பெண்கள் இத்தகைய தொந்தரவுகளால் கட்சியை விட்டு வெளியேறுவதாகவும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்தச் சம்பவங்கள் குறித்து ஏற்கனவே முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் கேசவ விநாயகம் ஆகியோரிடம் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று வேதனை தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் கரு.நாகராஜன் தரப்பிலிருந்து இதுவரை எந்த மறுப்பும் வரவில்லை.
tamilanda