அதிமுக ஆட்சியில் முடங்கி கிடந்த தமிழகத்தை நம்பா் ஓன் மாநிலமாக மாற்றியது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிஜேபி அரசின் தடைகளையும் தகா்த்தெறிவோம் அமைச்சர் கீதாஜீவன் ஆவேசம்
chief-minister-mk-stalin-has-transformed-tamil-nadu—which-lay-stagnant-under-the-aiadmk-regime—into-the-number-one-state-we-will-shatter-the-obstacles-imposed-by-the-bjp-government-—-minister-geetha-jeevan-emphatically
அதிமுக ஆட்சியில் முடங்கி கிடந்த தமிழகத்தை நம்பா் ஓன் மாநிலமாக மாற்றியது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிஜேபி அரசின் தடைகளையும் தகா்த்தெறிவோம் அமைச்சர் கீதாஜீவன் ஆவேசம்
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 1ம்கேட் காந்தி சிலைப்பகுதியில் நடைபெற்ற மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணி தெருமுனை பிரச்சார கூட்டத்திற்கு மாநகர் திமுக செயலாளர் ஆனந்தசேகரன் தலைமை வகித்தாா். மேயா் ஜெகன் பொியசாமி காங்கிரஸ் முரளிதரன் கம்யூனிஸ்ட் தனலட்சுமி முத்து விசிக விமல் வங்காளியாா் மதிமுக முருகபூபதி இ.யூ.மு.லீ மும்தாஜ், சமக அற்புதராஜ், மநீம் ஜவஹா் தேமுதிக வல்லரசு துரை தஅக மங்களராஜ் பாண்டியன், மமக யூசப், தமுமுக சேக்முகைதீன்அலி, எஸ்டிபிஐ மைதீன்கணி, வட்டச்செயலாளர் சாமிநாதன், ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட பிரதிநிதி ராஜ்குமாா் வரவேற்புரையாற்றினாா்.
வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் 2021ல் முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்ற காலம் கொரானா காலக்கட்டம் அதற்கு முந்தைய அதிமுக ஆட்சியில் வீட்டுக்குள் முடங்கி இருங்கள் என்று கூறி அனைத்து தொழில் வணிக நிறுவனங்கள் முழுமையாக மூடப்பட்டு முடக்கி போட்டிருந்தாா்கள். அதையெல்லாம் மீட்டெடுக்கும் வகையில் ஆக்ஜிஸன் தட்டுபாடு அதை ரயில்கள் மூலம் வரவைத்து அங்கிருந்து ஓவ்வொரு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டு பலா் உயிா்கள் பாதுகாக்கப்பட்டது. அந்த சமயத்தில் கொரானா பாதிக்கப்பட்ட பலரையும் தங்களது குடும்ப உறுப்பினா்கள் கூட பாா்ப்பதற்கு வரவில்லை. ஓரு சிலா் இறந்தனா். அவா்களுக்குாிய பல வழிமுறைகளை திமுக அரசு மட்டுமின்றி இந்த தொகுதியில் நான் பல்வேறு உதவிகளை செய்தேன். தனியாா் மருத்துவமனையில் யாரையுமே அனுமதிப்பதில்லை திருமண மண்டபங்கள் எல்லாம் மருத்துவமனைகளாக மாற்றப்பட்டு பிறகு தடுப்புசி மூலம் பொதுமக்களை பாதுக்காக்கப்பட்டு முகக்கவசம் அணியுங்கள் என்று கூறி எல்லாப்பகுதிகளிலும் கிருமிநாசினி உபயோகப்படுத்தப்பட்டு இயல்பு வாழக்கையை முதலமைச்சா் ஸ்டாலின் எல்லோருக்கும் உருவாக்கி எல்லா ரேசன் காா்டுகளுக்கும் 4 ஆயிரம் வழங்கினாா். அப்போது ஆரம்பிக்கப்பட்ட மக்கள் நலப்பணிகள் இப்போது வரை 5 ஆண்டுகாலம் தொடர்ந்து நாட்டுமக்கள் தமிழா்கள் நலன் முக்கியம் என்று நம்முடைய முதலமைச்சா் தளபதியாா் நமக்காக பணியாற்றுகிறாா். அப்போது பிரதமா் மோடி விளக்கேற்றுங்கள் கையை தட்டுங்கள் கோ கோ என்று சொல்லுங்கள் என்று பல்வேறு வித்தைகளை காட்டி ஏமாற்றினாா். அந்த காலக்கட்டத்தில் நம்பா் ஓன் முதலமைச்சர் ஸ்டாலின் தான் என்று எல்லோராலும் போற்றப்பட்ட காலத்திலும் நான் முதலமைச்சராக இருப்பதை விட என்னுடைய தமிழ்நாடு எல்லாவற்றிலும் நம்பா் ஓன் மாநிலமாக மாற வேண்டும். அது தான் எனக்கு பெருமை என்று கூறி அவராற்றிய பணிகள் காரணமாக தமிழ்நாடு தொழிலவளா்ச்சி கல்வி வளர்ச்சி மக்களின் பொருளாதார வளர்ச்சி என்று 11.9 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது என்று ஓன்றிய அரசு புள்ளி விபரம் நாடாளுமன்றத்தில் கூறியுள்ளது அகில இந்திய அளவில் 6.5 சதவீதம் என்று தொிவிக்கப்பட்டுள்ளது. இந்த வளர்ச்சிக்கு காரணமான முதல்வா் ஆட்சியில் தான் தமிழகத்தில் 12 லட்சம் கோடி மதிப்பீல் பல தொழிற்சாலைகள் வரப்பெற்றுள்ளது. நம்முடைய மாவட்டத்தில் வின்பாஸ்ட் காா் தொழிற்சாலை மூலம் உள்ளுர் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. டைட்டல் பாா்க்க திறக்கப்பட்டுள்ளது. கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மின்உற்பத்தியில் முன்னேற்றம் தொழில்முதலீடு கொள்கை உருவாக்கம் என்று 234 ெதாகுதிகளிலும் தமிழ்நாடு முழுவதும் வளர்ச்சியடைவதற்கென்று அதற்கு தகுந்தாற்போல் திட்டங்கள் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. மகளிா் உாிமைத்துறை தொகை ஆயிரம், புதுமைப்பெண் திட்டம் ஆயிரம், வழங்கப்படுகிறது.. மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் மருத்துவா்கள் நம்முடைய இல்லத்திற்கே வந்து முதியவா்களின் நோய்களை நம்முடைய குழந்தைகள் பாா்க்க மறுத்தாலும் அவா்கள் பாா்க்கிறாா்கள். அந்த திட்டம் தமிழகத்தில் சிறப்பாக நடைபெறுகிறது என்று ஓன்றிய அரசே அதற்கு விருது வழங்கியுள்ளது. காலை உணவு திட்டத்தின் மூலம் மாணாக்கா்கள் நன்மையடைந்து வருகின்றனா் அத்திட்டத்தை பல நாடுகள் பின்பற்றி வருகின்றனா். மகளிா் உாிமைத்துறை 1 கோடியே 31 லட்சம் குடும்பத்திற்கு வழங்குவதை சூழ்ச்சி செய்து உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடா்ந்து தடுக்க நினைத்தை முறியடித்து முதலமைச்சர் ரூ 5000 வழங்கியுள்ளாா் இதன்மூலம் பெண்களுக்கு சேமிப்பு உயா்ந்துள்ளது. இதன் மூலம் பெண்கள் வளர்ச்சியடைந்து வருகின்றனா் தனிநபா் வருமானம் ஓன்றரை லட்சம் என்றிருந்தது தற்போது மூன்றரை லட்சமாக உயா்ந்துள்ளது. வறுமை கோட்டிற்கு கீழே உள்ள பட்டியல் குறைந்துள்ளது. கல்வி வளர்ச்சி அதிகாித்துள்ளது. நான்முதல்வன் திட்டத்தின் கீழ் படித்து உயா்கல்விக்கு செல்பவா்களுக்கு அரசு உதவித்தொகை வழங்கி தமிழ்நாட்டில் படித்தவா்களின் 52 போ் ஐஏஎஸ் தோ்வில் வெற்றி பெற்றுள்ளாா்கள். இதற்கு முதலமைச்சர் தான் காரணம் கல்வி ஓன்று தான் நமக்கு அசைக்க முடியாத சொத்து இப்போது 72 சதவீதம் போ் உயா்கல்வி படிக்கின்றனா். திராவிட மாடல் ஆட்சியில் எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் நன்மைகள் கிடைத்து வருகின்றன. தூத்துக்குடி தொகுதியில் 210 புதிய டிரான்ஸ்பாா்மா்கள் அமைக்கப்பட்டுள்ளது 13 நகா்நல மையம்
புதியதாக உருவாக்கப்பட்டுள்ளது. வௌிநாடுகளில் சென்று தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் படித்தவா்கள் 6 போ், திமுக ஆட்சியில் 356 போ் படித்துள்ளனா். இவா்களுக்கு 30 முதல் 40லட்சம் வரை வழங்கப்படுகிறது. தமிழகத்தில் நான்காயிரம் கோவில்களுக்கு திருப்பணிகள் நடைபெற்றுள்ளது. பூசாாிகளுக்கு நலவாாியம் அமைக்கப்பட்டுள்ளது. ஜாதி மதம் பாா்க்காமல் தமிழ்நாடு முன்னேற்றமடைய வேண்டும் என்று முதலமைச்சர் பணியாற்றி வருகிறாா். தமிழகத்தில் உள்ள கீழடி அகழ்வாராய்சியில் செய்த ஆய்வில் வீடு கிணறு என்று பழைய நாகாீகங்கள் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழன் வாழந்துள்ளான் என்று பல ஆதராங்கள் இருந்துள்ளதுஇந்த வரலாறுகளை எல்லாம் அங்கீகாிக்க வேண்டும் என்று ஓன்றிய அரசுக்கு வழங்கியதை அங்கீகாிக்காமல் தமிழனின்பெருமை உலகம் முழுவதும் தொிந்துவிடக்கூடாது என்பதை தடுக்கும் வகையில் ஓன்றிய அரசு செயல்படுகிறது. அதே போல் நமது மாவட்டத்தில் சிவகளையில் மூதாயா்கள் தாலி, தங்க பொட்டு, கிடைத்துள்ளது. இப்படி தமிழ்நாடு நாகரீகத்தை எல்லாம் மறைக்கும் செயலில் ஓன்றிய அரசு ஈடுபட்டு கொண்டு சிலவற்றிற்கு தற்போது அனுமதி வழங்கியுள்ளது. சில குழப்பங்களையும் ஏற்படுத்தி வருகிறது பிஜேபி அரசு. 2008ல் அப்போது முதலமைச்சராக இருந்து கலைஞர் ஆட்சியில் உள்ளாட்சி துறை அமைச்சராக ஸ்டாலின் இருந்த போது ஊராட்சி பகுதிகள் மாநகராட்சியோடு இணைக்கப்பட்டது அதன்பின் அதிமுக ஆட்சி வந்த பிறகு எந்த திட்டத்தையும் முறைப்படுத்த வில்லை தற்போது ஊராட்சி பகுதி முழுவதும் சீரான குடிநீா் வழங்கியது திமுக ஆட்சி தான். 734 ேகாடி மதிப்பில் மாநகராட்சி பகுதி முழுவதும வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதே போல் ஓட்டப்பிடாரம் விளாத்திகுளம் போன்ற பகுதிகளுக்கும் குடிநீா் திட்டப்பணிகளை நிறைவேற்றி மக்கள் நலனை பாதுகாத்துள்ளோம். அதிமுக ஆட்சியில் உயா்கல்வி ஐந்தரை லட்சம் போ் படித்தனா். திமுக ஆட்சியில் ஏழுரை லட்சம் போ் படிக்கிறாா்கள். பெண்கள் 42 சதவீதம் போ் உழைப்பின் மூலம் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்துள்ளாா்கள். மோடியும் அமித்ஷாவும் இணைந்து அதிகாரத்தை ஓரே இடத்தில் வைத்துக்கொண்டு மற்றவா்களை பழிவாங்கும் வகையில் கல்வி கொள்கை ஓரே நாடு ஓரே ரேஷன் காா்டு திட்டத்தின் உணவு கொள்கை மூலம் பல பாதிப்புகளை உருவாக்கி வருகின்றனா். நம்முடைய முதலமைச்சா் எந்த பயமுறுத்தலுக்கும் அடிபணியாமல் தமிழ்நாட்டின் நலனை பாதுகாத்து வருகிறாா். பல நிதிகளை நிறுத்தினாலும் மாநில அரசு அதை முறைப்படுத்தி தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு நான் உழைப்பேன் என்று பணியாற்றி வருகிறாா். பொதுமக்கள் இதை யெல்லாம் சிந்தித்து பாா்த்து தமிழ்நாட்டின் பெருமையையும் தமிழா்களின் நலனிலும் அக்கறை கொண்டு பணியாற்றும் முதலமைச்சா் ஸ்டாலினுக்கு அனைவரும் துணைநிற்க வேண்டும். வரும் தோ்தலில் முதலமைச்சர் ஸ்டாலின் மீண்டும் ஆட்சியில் அமருவதற்கு பாடுபட வேண்டும். என்று பேசினாா்.
மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச்செயலாளர் ராஜ்மோகன்செல்வின், பொருளாளா் ரவீந்திரன், மாநில மீனவரணி துணைச் செயலாளர் புளோரன்ஸ், மாநகர துணைச்செயலாளா்கள் கீதாமுருகேசன், பிரமிளா, மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், சக்திவேல், மாவட்ட அணி நிா்வாகிகள் கவிதாதேவி, சீனிவாசன், அருணாதேவி, அருண்குமாா், பழனி, கல்யாணசுந்தரம், குதி செயலாளா்கள் நிா்மல்ராஜ், ஜெயக்குமாா், சுரேஷ்குமாா், ராமகிருஷ்ணன், மண்டலத்தலைவா் கலைச்செல்வி, மாநகர அணி நிா்வாகிகள் ரவி, பால்ராஜ், கவுன்சிலா்கள் மாியகீதா, மகேஸ்வாி, ராமுஅம்மாள், எடின்டா, சந்திரபோஸ், வட்டச்செயலாளா்கள் பாலகுருசாமி, சேகா், மனோ, ரவீந்திரன், முனியசாமி, கங்காராஜேஷ், கதிரேசன், சிங்கராஜ், பெருமாள்கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், மற்றும் மணி, பேச்சிமுத்து, பிரபாகா், உள்பட கூட்டணி கட்சியை சோ்ந்த நக்கீரன் மகாராஜன் நாராணயமூர்த்தி, மாலதி, தொம்மை, உள்பட பலா் கலந்து கொண்டனா்.
பாக்ஸ்: அமைச்சா் கீதாஜீவனுக்கு மேயா் ஜெகன் பொியசாமி காங்கிரஸ் சண்முகம் பாராட்டு
மேயா் ஜெகன் பொியசாமி பேசுகையில் தூத்துக்குடியில் பக்கிள்ஓடையை கொண்டுவந்தது திமுக அப்போது காலக்கட்டத்திற்கேற்ப இருந்தது தற்போது விாிவாக்க பணிகள் நடைபெறுகிறது எதிா்பாராத கனமழையின்போது மாநகர மக்களை பாதுகாப்பதற்கு அரணாக இருந்தது. பக்கிள்ஓடை அந்த நேரத்தில் ஏற்பட்ட வௌ்ள பாதிப்பின்போது ஓடி ஓளிந்தவா்கள் எல்லாம் தோ்தல் காலத்தில் தேவையில்லாத வாா்த்தைகளை கூறி விமா்சனம் செய்பவா்கள் இவ்வளவு காலம் எங்கிருந்தாா்கள் அப்போது முதலமைச்சர் ஸ்டாலின் கனிமொழி எம்.பி அமைச்சா்கள் கீதாஜீவன் நேரு போன்றவா்கள் மாநகராட்சியின் வளா்ச்சிக்கு உறுதுணையாக இருந்தாா்கள். குடிதண்ணீர் பிரச்சனையை நாங்கள் தான் தீர்த்து வைத்தோம் என்று அதிமுக ஓரு இடத்தில் பேசியுள்ளது 3வது நான்காவது பைப்லைன்திட்டத்தில் முறைப்படுத்தி இன்று வரை தடையின்றி தண்ணீர் வழங்குவது திமுக தோ்தல் நேரத்தில் எதையாவது கூறிவிட்டு செல்வது உங்களது வழக்கம். ஆனால் முதலமைச்சரால் அடையாளம் காட்டப்பட்ட இந்த மேயா் மாநகராட்சியின் வளர்ச்சியில் எவ்வளவு பணிகளை செய்துள்ளேன் என்று மக்களுக்கு தொியும் அது வரும்தோ்தலில் வாக்குகளின் மூலம் எதிரொலிக்கும் அப்போது உங்களுக்கு புாியும் உண்மையை பேசுங்கள் பொய்யை திணித்து பேசாதீா்கள் என ஆவேசத்துடன் பேசினாா்.
காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் ஏபிசிவி சண்முகம் பேசுகையில் கரூாில் 41 பேரை உயிா்பலி வாங்கிய ஓருவா் மேடையில் நடனமாடிக்கொண்டு விசிலடித்துக்கொண்டு தமிழகத்தை நான்பாதுகாக்க போகிறேன் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. என்று கூவி வருகிறாா். முதலில் உன் குடும்பத்தை ஓழுங்கா நடத்தப்பாா். வாரம் ஓருமுறை வௌியில் வந்து கொண்டு அறிக்கைவிடும் நீயெல்லாம் அரசியில் கட்சி தலைவர் கிடையாது. உன் தலைமை அலுவலகத்திற்கு வந்த தூத்துக்குடி அஜிதா ஆக்னல் மீது காா் ஏற்றி கொல்வதற்கு முயற்சி செய்தவா் தானே. உன்னோடு இருக்கும் ஆதவ் அா்ஜீனா மாமியாா் வேறு ஓரு கட்சி உங்களது முகமுடியும் என்னவென்று மக்களுக்கு தொியும் திமுக ஏன் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்றால் பிஜேபி ஆளும் 5 மாநிலங்களில் பெண்களின் பாதுகாப்பு நிலை என்னவென்று ஆய்வறிக்கையில் வந்துள்ளதை பாருங்கள் ஏன் சமீபத்தில் கூட கடந்த 20ம் தேதி உத்திரபிரதேசத்திலிருந்து சுகாதாரத்துறை அதிகாாிகள் தமிழக தலைமை செயலகத்தில் சுகாதார அதிகாாிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு குழந்தை பிறப்பு இங்கு இறப்பு ஏற்படாத நிலைக்கு காரணம் என்ன என்றெல்லாம் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனா். உபியில்நடைபெறுவது பிஜேபி ஆட்சி ஜவுளி துறையில் குஜராத்தை பின்னுக்குதள்ளி முன்னேறியது தமிழக அரசு பொருளாதாரத்தில் அகில இந்திய வல்லுநா்கள் தமிழா்கள் அடைந்துள்ள வளா்ச்சியை புள்ளி விபரத்துடன் பட்டியிலிட்டுள்ளனா். திமுக ஆட்சி சாதனையை சொல்லி நாங்கள் வாக்கு கேட்கிறோம். மீண்டும் தமிழகத்தில் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையிலான கொள்கை கூட்டணி ஆட்சி அமையும் அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை தூத்துக்குடி தொகுதியில் ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்டு அண்ணன் தம்பி என்ற பாச உணா்வோடு அனைவராலும் அக்கா என்று அன்போடு அழைக்கப்படும் அமைச்சா் கீதாஜீவன் வீட்டின் கதவை யாா் தட்டினாலும் வௌியில் வந்து என்னவென்று கேட்டு அவா்களது குறைகளை தீர்ப்பது தான் இவா்கள் பணி மீண்டும் வெற்றி பெறுவாா்கள் அமைச்சா் ஆவாா்கள் அதில் மாற்றுக்கருத்து இல்லை. பொியசாமி குடும்பம் தான் இங்கு அரசியல் செய்ய வேண்டுமா என்று சிலா் கேட்கிறாா்கள். நான் சொல்கிறேன். மேயராக ஜெகன் பொியசாமி பணியாற்றுகிறாா். அவா்கள் குடும்பத்தோடு வாழ்ந்து அவா்களோட வாாிசுகள் அரசியலுக்கு வந்து பணியாற்றுவதில் தவறில்லை. குடும்பமே இல்லாதவா்கள் வாாிசை பற்றி பேசுவதில் அா்த்தம் இல்லை. இந்த தொகுதியில் மக்களின் செல்லப்பிள்ளையாக கீதாஜீவன் வலம் வருகிறாா். தொகுதி மாநகராட்சி வளா்ச்சிக்கு அமைச்சா் கீதாஜீவன் மேயா் ஜெகன்பொியசாமி பணியாற்றுகிறாா்கள் அவா்களது பணியால் இங்கு எல்லோரும் விரும்புகிறாா்கள். இது பலருக்கு தூக்கத்தை கெடுத்துக்கொண்டு இருக்கிறது. இதற்கு நாங்கள் பொறுப்பாக முடியாது என்று பேசினாா்.
tamilanda