திருச்செந்தூர் தொகுதியில் தொடர்ந்து ஏழு முறை எம்எல்ஏவாக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் இந்த முறை ஓரங்கட்டப்படுவாரா? திருச்செந்தூர், ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம், தொகுதியில் பொதுமக்களால் புறக்கணிக்கப்பட்டு வரும் திமுக வேட்பாளர்கள்??
will-anita-radhakrishnan—who-has-served-as-the-mla-for-the-tiruchendur-constituency-for-seven-consecutive-terms—be-sidelined-this-time-around-are-the-dmk-candidates-in-the-tiruchendur-ottapidaram-and-vilathikulam-constituencies-currently-facing-rejection-by-the-public
திருச்செந்தூர் தொகுதியில் தொடர்ந்து ஏழு முறை எம்எல்ஏவாக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் இந்த முறை ஓரங்கட்டப்படுவாரா? திருச்செந்தூர், ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம், தொகுதியில் பொதுமக்களால் புறக்கணிக்கப்பட்டு வரும் திமுக வேட்பாளர்கள்??
திமுக தலைமைக்கு ஏமாற்றம் கொடுக்கும் தூத்துக்குடி மாவட்டம்!"!
===============
தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரையில் கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் கோவில்பட்டியை தவிர மீதமுள்ள அனைத்து தொகுதியையும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி கைப்பற்றியது.
ஆனால் 2026 ஆண்டு
சட்டமன்றத் தேர்தலில் அதற்கு நேர் மாறாக தூத்துக்குடி வடக்கு தெற்கு, ஆகிய இரு மாவட்டங்களுக்கு உட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளில் பாதி கூட கரை சேராது என்ற ஒரு பரபரப்பான தகவல் தூத்துக்குடி மாவட்ட பொது மக்கள் மத்தியில் பேசப்படுகிறது. இந்த சூழ்நிலை உருவாகியுள்ளதற்கு பல்வேறு காரணங்கள் பொதுமக்கள் மத்தியில் தெரிவிக்கப்படுகிறது.
உதாரணத்திற்கு ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏ சண்முகையாவுக்கு சீட்டு மறுக்கப்பட்டுள்ளது.
அதற்குக் காரணம்
அதே சமயத்தில் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் உள்ளூர் வேட்பாளருக்கு சீட் ஒதுக்காமல் வெளியூர் வேட்பாளருக்கு திமுக தலைமை சீட்டு ஒதுக்கியதால் அன்றைய தேதியில் இருந்து பொதுமக்கள் மத்தியில் தொடர் எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது. வெளியூர் திமுக வேட்பாளர் மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்த நிலையில் திமுக தலைமை மௌனம் சாதித்ததால் ஓட்டப்பிடாரம் தொகுதி மக்கள் உள்ளூர் வேட்பாளருக்கு தான் தங்களது ஆதரவு என போர் கொடி தூக்கியதால் அதிமுக கூட்டணி கட்சியில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வேட்பாளர் சுந்தர்ராஜன் மிக குஷியில் காணப்படுகிறார். தொகுதியில் அவருக்கு சென்ற இடமெல்லாம் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு வழங்குவதால் திமுக தரப்பினர் மிகவும் சோர்வடைந்துள்ளனர். அதே நேரத்தில் அதிமுக கூட்டணி கட்சிகளை சேர்ந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் தரப்பினர் மிகுந்த உற்சாகத்துடன் பணியாற்றி வருகின்றனர். ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் திமுக பரபரப்பு இல்லாமல் காணப்படுகிறது. திமுகவினர் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் சோர்வடைந்துள்ளனர். அதுபோல் திருச்செந்தூர் திமுக வேட்பாளரும் அமைச்சர்ருமான அனிதா ராதாகிருஷ்ணனுக்கு தொகுதியில் எதிர்ப்பு வலுத்து வருகிறது. நேற்று அமைச்சர் பிரச்சாரத்தில் ஈடுபடும் பொழுது இப்பகுதியில் எந்தவித அடிப்படை பணிகளையும் செய்யவில்லை எனவும் கடந்த 5 ஆண்டுகளாக தொகுதிக்கு பேர் சொல்லும் அளவிற்கு எந்த திட்டங்களும் நிறைவேறவில்லை எனவும் இதனை கண்டித்து உள்ளூர் கட்சிக்காரர்களிடம் பொதுமக்கள் பெண்கள் தங்களது எதிர்ப்பை தெரிவிக்க துவங்கினர். திமுக வேட்பாளர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பிரச்சார வாகனத்தை பெண்கள் மறித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரச்சாரத்தை தொடராமல் பகுதியில் இருந்து திமுக வேட்பாளர் திரும்பி செல்லும் சூழ்நிலை ஏற்பட்டது. தூத்துக்குடி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட 3 தொகுதிகளில் 2 தொகுதிகளில் திமுக போட்டியிடும் சூழலில் இரண்டு தொகுதிகளும் பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்புகள் நாள்தோறும் கிளம்பி வருகிறது. மேலும் திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் முதுகு வலி காரணமாக கடந்த ஐந்து ஆண்டுகளாக தொகுதி பக்கமே செல்லவில்லை மேலும் திருச்செந்தூர் கோவில் நகரம் இன்றைக்கு சாக்கடையின் நகரமாக மாறி வருகிறது அந்தப் பகுதிக்கு சென்றாலே துர்நாற்றம் வீசுகிறது என்று உள்ளூர் மக்கள் முதல் திருச்செந்தூர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் வரை மூக்கை பிடித்துக் கொண்டுதான் செல்கிறார்கள் மேலும் இவர் தொடர்ந்து ஏழு முறை எம்.எல்.ஏ வாகவே பயணித்து வருகிறார் இதனால் இந்த பகுதி வளர்ச்சி அடையாமல் தேய்ந்து கொண்டிருக்கிறது என்று அந்தப் பகுதியைச் சார்ந்த திமுக பிரமுகர்களே குறை கூறுகின்றனர். திருச்செந்தூர் பாஜக வேட்பாளர் கே ஆர் எம் ராதாகிருஷ்ணன் பல்வேறு தேர்தல் வியூகங்கள் வகுத்து செயல்பட தொடங்கி உள்ளதால் திருச்செந்தூர் தொகுதியும் போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக வெற்றி கழக விஜய் கட்சியினர் வேகம் எடுத்து செயல்படுகின்றனர் பணத்தை வாரி இறக்கிறார் ஜே கே ஆர் முருகன். தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி காங்கிரசுக்கு திமுக கூட்டணி சார்பில் ஒதுக்கப்பட்டுள்ளதால். சிட்டிங் எம்எல்ஏ ஊர்வசி அமிர்தராஜ் களமிறக்கப்பட்டுள்ளார். கல்வி புரட்சியில் கலங்கண்டவர் பின்தங்கி இருந்த ஸ்ரீவைகுண்டம் தொகுதியை மீண்டும் அதிமுக கைப்பற்றுமா காங்கிரஸ் கைப்பற்றுமா என்பது தான் தற்போதைய கேள்விக்குறியாக இருக்கிறது காரணம் மண்ணின் மைந்தருக்கு தான் இந்த முறை வாய்ப்புகள் வழங்கப் போகிறோம் எம் எல் ஏ வை நினைத்தால் சென்று பார்ப்பதற்கு முடியவில்லை காரணம் எம்எல்ஏ வெளியூர் காரர் என்பதால் அவர் நினைத்த நேரத்தில் வருகிறார் நினைத்த நேரத்தில் செல்கிறார் என்று மனவேதனையோடு கூறுகிறார்கள். ஏற்கனவே சாத்தான்குளம் உள்ளிட்ட அதன் சுற்றுவட்டார பகுதி காங்கிரஸ் கோட்டை என்பது நீண்ட காலமாக இருந்து வருகிறது. தெற்கு மாவட்டத்தில் இப்படி ஒரு சூழ்நிலை உருவாகியுள்ள நிலையில் வடக்கு மாவட்ட திமுகவில் கோவில்பட்டி தொகுதி கடந்த முறை எந்த ஒரு நபருக்காக அவர் உன் மீது உள்ள அதிருப்த்தியால் அதிமுக வேட்பாளர் கடம்பூர் ராஜு எளிதாக வெற்றி பெற்றார் அவரை எதிர்த்து நின்ற டிடிவி தினகரன் தோல்வி அடைவதற்கு காரணம் அவருடன் பணியாற்றிய கோவில்பட்டி மக்கள் மத்தியில் வெறுப்புணர்வு பெற்றிருந்த ஒருவரால் கடம்பூர் ராஜ் வெற்றி பெற்றார். டிடிவி தினகரன் தோற்கடிக்கப்பட்டார். அதே நபர் தற்போது கட்சி மாறி திமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதால் 2021 ஆண்டு கொடுத்த அதே ரிசல்ட் கோவில்பட்டி மக்கள் கொடுக்க முன் வந்துள்ளதாக பேசப்படுகிறது. அப்படியென்றால் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியிலும் திமுகவிற்கு சற்று நெருக்கடியை என்ற சூழல் உருவாகியுள்ளது. இந்த முறை முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தோற்கடிக்கப்படுவதற்கான வேலைகளை பல்வேறு கட்சியினர் செய்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் பிரிந்து 35 ஆண்டுகள் கடந்து விட்டது ஆனால் 35 ஆண்டுகளுக்கு பிறகும் இன்று வரை பத்திரிகையாளர்களுக்கு வழங்க வேண்டிய மானிய விலை வீட்டுமனை பட்டா இதுவரை வழங்கவில்லை. ஆனால் செய்தித்துறை அமைச்சராக இருந்தவர் கடம்பூர் ராஜு இவருடைய அமைச்சரவை காலத்தில் கூட பத்திரிக்கையாளர்களுக்கு மானிய விலை வீட்டு மனை பட்டா வழங்கவில்லை இவருடைய காலத்தில் இது கூட செய்யவில்லை என்று சொன்னால் இவர் என்ன சாதனை இந்த பகுதியில் செய்திருப்பார் என்பதுதான் கேள்விக்குறியாக இருக்கிறது பல கோடிகளை குவித்திருக்கிறார் மக்களை வேதனை பட வைத்திருக்கிறார் இவரால் அதிமுகவினரே மிகுந்த வருத்தத்தில் உள்ளனர் இவர் செல்ல பாண்டியனுக்கு சீட்டு வழங்கக் கூடாது என்று கூட இவர் கோரிக்கை வைத்திருக்கிறார் அந்த கோரிக்கை எடுபடவில்லை இவர் கடந்த முறை திமுகவினர்களோடு கைகோர்த்து பல அந்தரங்க வேலைகளையும் செய்திருக்கிறார் என்று திமுகவினரே புலம்புகின்றனர். ஆகையால் இந்த தொகுதியில் திமுக கருணாநிதி வெற்றி பெறுவாரா? விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ தொடர்ந்து மூன்று முறை எம்எல்ஏவாக இருக்கிறார் இவர் ஒன்றிய பெருந்தலைவராக இருந்து பின்னர் எம்எல்ஏவாக மாறியிருக்கிறார். இவர் ஒன்றிய பெருந்தலைவராக இருக்கின்ற பொழுது மணல் மாஃபியா என்கின்ற பட்டத்தை பெற்றார். பல்வேறு கோடிகளை சம்பாத்தியம் செய்த இவர் இந்த முறை அந்த தொகுதியில் வளர்ச்சியில் எந்த ஒரு முன்னேற்றமும் இதுவரை இல்லை. மேலும் வானம் பார்த்த பூமி என்பதனால் மழை பெய்தால் தான் அந்த பகுதியை செழிக்கும் இல்லை என்று சொன்னால் இந்த பகுதி வறட்சியாகவே காணப்படும் தொடர்ந்து வறட்சியாகவே காணப்பட்டு வருகிறது பொதுமக்கள் வறட்சியாக இருக்கிறார் எம்எல்ஏ கோடியில் மிதக்கிறார் ஆகையால் இந்த முறை இவர் வெற்றி பெறுவாரா என்பது சந்தேகம்? மொத்தத்தில் தூத்துக்குடி மாவட்ட சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 6 தொகுதிகளில் எத்தனை கரை சேரும் என்ற ஒரு கேள்விக்குறி எழுந்துள்ளது இவை அனைத்தும் இன்னும் ஒரு சில வாரங்களில் முழுமையான தீர்வு கிடைத்துவிடும் மொத்தத்தில் தூத்துக்குடி மாவட்டம் திமுக தலைமைக்கு ஏமாற்றமே!!!
tamilanda