தூத்துக்குடி பக்கிள் ஓடை விரிவாக்கம் பலன் தருமா? கடல் மட்டத்தை விட தாழ்வான நிலப்பரப்பு - வல்லுநர்கள் எச்சரிக்கை!

தூத்துக்குடி பக்கிள் ஓடை விரிவாக்கம் பலன் தருமா? கடல் மட்டத்தை விட தாழ்வான நிலப்பரப்பு - வல்லுநர்கள் எச்சரிக்கை!

தூத்துக்குடி பக்கிள் ஓடை விரிவாக்கம் பலன் தருமா? கடல் மட்டத்தை விட தாழ்வான நிலப்பரப்பு - வல்லுநர்கள் எச்சரிக்கை!

தூத்துக்குடி:*

தூத்துக்குடி மாநகரின் பிரதான நீர்வழித்தடமான பக்கிள் ஓடையை விரிவாக்கம் செய்ய மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது. இந்த ஓடை விரிவாக்கம் செய்வது சரியான தீர்வா என்ற கேள்வி பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

கடல் மட்டம் உயர்வு, நிலம் தாழ்வு:

தூத்துக்குடி மாநகரம் கடல் மட்டத்தை விட பல இடங்களில் தாழ்வாக உள்ளது. தற்போது பக்கிள் ஓடையில் சாக்கடை நீர் கலந்து செல்கிறது. இந்த நிலையில் ஓடையை அகலப்படுத்தினால் மட்டும் மழைநீர் கடலுக்கு வடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கடல் ஏற்றம் (High Tide) ஏற்படும் நேரத்தில் கடல் நீர் ஓடை வழியாக நகருக்குள் புகுந்து விடும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே வெறும் அகலப்படுத்துதல் மட்டும் போதாது, ஓடையை ஆழப்படுத்தி தூர் வாருவதுடன், கடலில் கலக்கும் இடத்தில் மதகு மற்றும் தடுப்பு கதவுகள் (Sluice Gate) அமைத்து, சாக்கடை நீரை தனியாக பிரித்து சுத்திகரிக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

*பாலித்தீன் குப்பையால் நிரம்பும் பக்கிள் ஓடை: கடல் தாய் கதறுவாள்!*

மற்றொரு புறம் பக்கிள் ஓடையின் தற்போதைய நிலை மிகவும் மோசமாக உள்ளது. ஓடை முழுவதும் பாலித்தீன் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் பாட்டில்கள், குப்பை கூளங்கள் நிரம்பி காணப்படுகிறது.

சுத்தம் செய்யப்படாமல் கிடக்கும் இந்த குப்பைகள் அனைத்தும் மழைக்காலத்தில் அடித்துச் செல்லப்பட்டு நேரடியாக கடலில் கலக்கிறது. இதனால் கடல்வாழ் உயிரினங்கள் கடுமையாக பாதிக்கப்படுவதுடன், கடல் மாசு அதிகரித்து வருகிறது.

"ஓடையை சுத்தம் செய்யாமல் விரிவாக்கம் செய்தால், குப்பைகள் அனைத்தும் கடலுக்கு சென்று கடல் தாயை கதற வைக்கும்" என பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். எனவே பக்கிள் ஓடையை முழுமையாக தூர் வாரி, பிளாஸ்டிக் இல்லாத ஓடையாக மாற்றி, தடுப்பணைகள் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.