தூத்துக்குடி: குலசை தசரா திருவிழாவிற்கு நாளை உள்ளூர் விடுமுறை வழங்குக! இந்து மக்கள் கட்சி வலியுறுத்தல்!

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழா கடந்த 10 நாட்களாக கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவின் இரண்டாவது பெரிய தசரா திருவிழாவாக கருதப்படும் இவ்விழாவில், கோடிக்கணக்கான பக்தர்கள் வேடம் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.

இன்று விஜயதசமியை முன்னிட்டு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற உள்ள நிலையில், நாளை மாலை அணிந்து விரதம் இருந்த பக்தர்கள் காப்பு தரிக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்நிலையில், காமநாயக்கன்பட்டி திருவிழாவிற்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டது போல, கோடிக்கணக்கான பக்தர்கள் கூடும் குலசை தசரா திருவிழாவின் காப்பு தரிக்கும் நிகழ்ச்சிக்காக நாளை தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை வழங்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் தா.வசந்தகுமார் தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக அரசே! மாவட்ட நிர்வாகமே! நாளை உள்ளூர் விடுமுறை வழங்கிடு! குலசை தசரா - கோடிக்கணக்கான பக்தர்கள் கூடும் இந்தியாவின் 2-வது பெரிய தசரா திருவிழா! - இந்து மக்கள் கட்சி கோரிக்கை #KulasaiDasara #Thoothukudi #LocalHoliday #OneTamilNews