தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்! 2 நாட்கள் மிக கனமழை எச்சரிக்கை - ஆட்சியர் அறிவிப்பு!

தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்! 2 நாட்கள் மிக கனமழை எச்சரிக்கை - ஆட்சியர் அறிவிப்பு!

தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்! 2 நாட்கள் மிக கனமழை எச்சரிக்கை - ஆட்சியர் அறிவிப்பு!

தூத்துக்குடி மாவட்டம் மற்றும் தாமிரபரணி ஆற்றின் நீர்பிடிப்பு மாவட்டங்களான திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களுக்கு வரும் 20.10.2026 முதல் 21.10.2026 வரை மிகக் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சென்னை மண்டலம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

*ஆட்சியர் விஷு மகாஜன் எச்சரிக்கை:*

மருதூர், திருவைகுண்டம் அணைக்கட்டு, கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரை, கோரம்பள்ளம் ஆறு மற்றும் அணைக்கட்டு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் ஆற்றில் குளிக்கவோ, கரையோரம் செல்லவோ வேண்டாம் எனவும், தாழ்வான பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெள்ள பாதிப்பு தொடர்பான உதவிக்கு கட்டுப்பாட்டு அறை எண்கள்: *1077 (கட்டணமில்லா), 7092300044*