தூத்துக்குடி புறநகர் மாவட்ட தமிழக வெற்றிக் கழக பகுதி அலுவலக திறப்பு விழா - அமைச்சர் மதன்ராஜா தலைமையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது!

தூத்துக்குடி, அக்.27: 

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான *ஜோசப் விஜய்* ஆணைக்கிணங்க, கழக பொதுச் செயலாளர் *N.ஆனந்த்* ஆலோசனைப்படி, தூத்துக்குடி புறநகர் மாவட்ட கழக செயலாளரும், குறு சிறு நடுத்தர தொழில் துறை அமைச்சருமான *P.மதன்ராஜா .,* வழிகாட்டுதலின்படி, தூத்துக்குடி புறநகர் மாவட்ட பகுதி அலுவலக திறப்பு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இவ்விழாவிற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான *பெ. மதன்ராஜா* அவர்கள் தலைமை தாங்கி, குத்துவிளக்கு ஏற்றி, மாவட்ட பகுதி அலுவலகத்தை திறந்து வைத்து விழாவை சிறப்பித்தார். பின்னர் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. விழாவின் நினைவாக அமைச்சர் அவர்கள் மரம் நட்டு வைத்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட அளவிலான கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். நிகழ்வு மிகுந்த எழுச்சியுடனும் உற்சாகத்துடனும் சிறப்பாக நடைபெற்றது.

இதில் பகுதி செயலாளர் R. ராஜேஸ்வர்*, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் *A.வினோத் , இணை அமைப்பாளர் M.விக்னேஷ்*, அருண், ஐயாப்பிள்ளை, பொன்சேகர் மற்றும் பகுதி இளைஞரணி கணேஷ், துரை மற்றும் பகுதி அமைப்பாளர்கள், வட்ட செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.