சேதமடைந்த சாலையை சீரமைக்க கோரி - சாலை நடுவே நெல் நாற்று நடும் போராட்டம்!
சேதமடைந்த சாலையை சீரமைக்க கோரி - சாலை நடுவே நெல் நாற்று நடும் போராட்டம்!
ஒட்டுடன்பட்டி::
புளியம்பட்டியில் இருந்து ஒட்டுடன்பட்டி கிராமத்திற்கு செல்லும் தார்ச்சாலை மிகவும் சேதமடைந்து, மக்களின் பயன்பாட்டிற்கு இடையூராக இருந்து வருவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மழைக்காலங்களில் அந்த வழியாக சென்று வர மிகவும் சிரமமாக உள்ளதாகவும், இந்த மோசமான சாலையில் மக்கள் நடந்து செல்வதற்கு கூட முடியாத சூழல் உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்த சாலை போடப்பட்டு கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துடன் 5 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டதாகவும், ஆனால் ஊராட்சி ஒன்றிய அலுவலர்களின் அலட்சியத்தால் இதுவரை சீரமைக்க எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை எனவும் கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனால் சாலையை உடனடியாக சீரமைக்க வலியுறுத்தி, நமது கிராம மக்கள் அனைவரும் இணைந்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (கிராம ஊராட்சி) ஹைகோர்ட் ராஜா, (வட்டார ஊராட்சி) சுப்புலட்சுமி மற்றும் ஒன்றிய உதவி பொறியாளர் செந்தில் ஆகியோரை கண்டித்து, சாலையின் நடுவே நெல் நாற்று நடும் போராட்டம் நடத்தி தங்களது கண்டனங்களை தெரிவிக்க உள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
tamilanda