வேடநத்தம் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் - அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் பரபரப்பு பேட்டி
the-case-involving-the-sexual-assault-and-brutal-murder-of-a-schoolgirl-in-vedanatham-must-be-transferred-to-the-cbi-—-ct-chellapandian-aiadmk-state-trade-wing-secretary-and-former-minister-gives-a-sensational-interview
வேடநத்தம் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் - அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் பரபரப்பு பேட்டி
தூத்துக்குடி.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேடநத்தம் கிராமத்தில் வசிக்கும் 12ம் வகுப்பு பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டு 3 தினங்கள் ஆகியும் குற்றவாளியை கைது செய்யாமல் போலீசார் திணறி வருகின்றனர் எனவும், இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே உண்மையான குற்றவாளிகள் உடனடியாக பிடிபட வாய்ப்புள்ளது என முன்னாள் அமைச்சரும் அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளருமான சி.த.செல்லப்பாண்டியன் தெரிவித்தார்.
இதுகுறித்து தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள அதிமுக மாநில வர்த்தக அணி அலுவலகத்தில் வைத்து முன்னாள் அமைச்சரும் அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளருமான சி.த.செல்லப்பாண்டியன் பத்திரிகையாளர் சந்திப்பின் போது பேசியதாவது: தமிழகத்தில் சட்ட ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுள்ளது. சிறுமி முதல் மூதாட்டி வரை திமுக ஆட்சியில் பாதுகாப்பு இல்லை. பெண்கள், மாணவிகள் ரோட்டில் சுதந்திரமாக நடமாட முடியாத அவல நிலை உள்ளது. தமிழ்நாட்டில் சட்டஒழுங்கு அடியோடு சீர்கெட்டு உள்ளதற்கு காரணம் மதுபானம் மற்றும் கஞ்சா புழக்கம் அதிகரித்து வருவதால் தான். தமிழகத்தில் எடப்பாடியார் தலைமையில் நடைபெற்ற அதிமுக ஆட்சி காலத்தில் சட்ட ஒழுங்கு மிகவும் கட்டுப்பாடுடன் இருந்தது. பாலியல் வன்கொடுமை, கொலை, செயின் வழிப்பறி, போன்ற சம்பவங்கள் மிக மிக குறைவு. ஆனால் 2021ல் திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் தமிழ்நாட்டில் கஞ்சா புழக்கம் மற்றும் மதுவால் தொடர் கொலைகள் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாக தமிழ்நாடு மாறி வருகிறது.
12ம் வகுப்பு பள்ளி மாணவி காணவில்லை என விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பெற்றோர்கள் புகார் அளித்த போது, உடனயாக நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாகவும், அவதூறாகவும் பேசியதாக புகார் எழுந்துள்ளது. காவல்துறை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தமிழக முதல்வர் தான் இதற்கு முழு பொறுப்பேற்க வேண்டும். இந்த சம்பவத்திற்கு தமிழக முதல்வர் தார்மீக பொறுப்பேற்று உடனடியாக முதல்வர் பதவியிலிருந்து விலகியிருக்க வேண்டும்.
படுகொலை செய்யப்பட்ட பள்ளி மாணவியின் குடும்பத்திற்கு தமிழக அரசு உரிய நிவாரணம் உடனடியாக அறிவிக்க வேண்டும். குற்றவாளிக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தர இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டுமென முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் தெரிவித்தார்.
அப்போது,தூ த்துக்குடி தெற்கு மாவட்ட துணை செயலாளர் சந்தனம்,தெற்கு மாவட்ட வா்த்தக அணி செயலாளா் துரைசிங், முன்னாள் நகா்மன்ற தலைவர் மனோஜ்குமாா், முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால், வடக்கு மாவட்ட ஜெ பேரவை இணைச்செயலாளர் ஜீவா பாண்டியன், ,மத்திய அரசு வழக்கறிஞர் ராஜாராம்,முன்னாள் நகர் மன்ற துணை தலைவர் ரத்தினம்,முன்னாள் மாவட்ட இளைஞர் இளம் பெண்கள் பாசறை தலைவர் ராஜா சிங், ஜெபசிங், அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து துறை இணை செயலாளர் சங்கர் மற்றும், ஐயப்பன், அருண்குமார், உள்பட பலா் கலந்து கொண்டனா்.
tamilanda