தூத்துக்குடி பத்திரிக்கையாளர்களின் மானிய விலையில் வீட்டுமனை கோரிக்கை நிறைவேற்றப்படுமா? என்ற எதிர்பார்ப்புடன் கால் நூற்றாண்டுகளாக பத்திரிக்கையாளர்கள் காத்திருக்கின்றனர்.

தூத்துக்குடி பத்திரிக்கையாளர்களின் மானிய விலையில் வீட்டுமனை கோரிக்கை நிறைவேற்றப்படுமா? என்ற எதிர்பார்ப்புடன் கால் நூற்றாண்டுகளாக பத்திரிக்கையாளர்கள் காத்திருக்கின்றனர்.

தூத்துக்குடி பத்திரிக்கையாளர்களின் மானிய விலையில் வீட்டுமனை கோரிக்கை நிறைவேற்றப்படுமா? என்ற எதிர்பார்ப்புடன் கால் நூற்றாண்டுகளாக பத்திரிக்கையாளர்கள் காத்திருக்கின்றனர்.

     தமிழகத்தில் உள்ள பத்திரிகையாளர்களுக்கு மாவட்ட தலைநகரங்களில் அரசின் சார்பில் மானிய விலையில் வீட்டு மனை பட்டா வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சென்னை, கோவை, மதுரை, திண்டுக்கல், நெல்லை உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் பத்திரிக்கையாளர்களுக்கு மானிய விலையில் வீட்டுமனைகள் வழங்கப்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் இரண்டு மற்றும் மூன்றாம் கட்டமாக வழங்க பட்டுள்ளது. ஆனால் தூத்துக்குடி மாவட்டம் உருவாகி 40 ஆண்டுகள் ஆகியும் இதுவரை பத்திரிக்கையாளர்களுக்கு வீட்டுமனை திட்டம் எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. கடந்த 2000ம் ஆண்டு முதல் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை மனு அளித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2020ம் ஆண்டு தூத்துக்குடி பத்திரிகையாளர்களின் தொடர் முயற்சியால் சேர்வைகாரன்மடம் ஊராட்சி பகுதியில் ஒரு இடம் தேர்வு செய்யப்பட்டது. அந்த இடத்திற்கு செல்வதற்கு பாதை இல்லாததால் தனிநபரிடமிருந்த ஒரு இடத்தை பத்திரிக்கையாளர்களே வாங்கி அரசு பெயரில் பத்திரம் பதிவு செய்து கொடுத்தனர். அரசு தரப்பில் உடனடியாக 71 நபர்களுக்கு அந்த இடத்தில் பட்டா வழங்கப்படும் என உறுதியளித்தனர். ஆனாலும் இதுவரையில் இடம் வழங்கப்படவில்லை. தற்போது பத்திரிக்கையாளர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதால் வேறு ஒரு இடமும் தேர்வு செய்து அனைவருக்கும் சேர்த்து வழங்குவதாக கூறி காலம் கடத்தி வருகின்றனர். தூத்துக்குடியை சுற்றி அரசுக்கு சொந்தமான இடங்கள் பல உள்ளது. ஆனாலும் அதிகாரிகள் அதனை கண்டுகொள்ளாமல் கடந்த 25 ஆண்டுகளாக இழுத்தடித்து வருகின்றனர். கடந்த திமுக ஆட்சியில் கனிமொழி எம்.பி முயற்சியால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கபட்டு நிதித்துறை செயலாளர் வரை கொண்டு செல்லப்பட்டது. தூத்துக்குடி பத்திரிக்கையாளர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வந்த நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் மீண்டும் பத்திரிக்கையாளர்களின் கோரிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளது. தூத்துக்குடி பத்திரிக்கையாளர்களின் 25 ஆண்டுகால கோரிக்கைக்கு தீர்வு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் பத்திரிக்கையாளர்கள் காத்திருக்கின்றனர்.