தமிழக பாஜக தலைவராகிறார் எல்.முருகன்? - மத்திய இணை அமைச்சர் பதவியை ராஜினாமா!

தமிழக பாஜக தலைவராகிறார் எல்.முருகன்? - மத்திய இணை அமைச்சர் பதவியை ராஜினாமா!

தமிழக பாஜக தலைவராகிறார் எல்.முருகன்? - மத்திய இணை அமைச்சர் பதவியை ராஜினாமா!

டெல்லி / சென்னை, அக்.14: :

தமிழக பாஜக-வில் பெரும் மாற்றம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மீண்டும் தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்க உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

இதற்காக அவர் தனது மத்திய அமைச்சர் பதவி மற்றும் ராஜ்யசபா எம்.பி பதவியை நேற்று (அக்.13) ராஜினாமா செய்துள்ளார். 

பிரதமர் மோடிக்கு அவர் எழுதிய கடிதத்தில், "தமிழகத்தில் பாஜகவை பலப்படுத்த தரைமட்டத்தில் இருந்து பணியாற்ற விரும்புகிறேன். 2029 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு முழு நேரமாக கட்சிப் பணியில் ஈடுபட விரும்புகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். bfae

*யார் இந்த எல்.முருகன்?*

மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சராக இருந்தவர். 2020-ம் ஆண்டு மார்ச் 11 முதல் 2021 ஜூலை 7 வரை தமிழக பாஜக மாநில தலைவராக பணியாற்றியவர். அதன் பிறகு கே.அண்ணாமலை தலைவரானார். தற்போது தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் உள்ளார். 

தினக்கூலி தொழிலாளியின் மகனாக இருந்து மத்திய அமைச்சராக உயர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.