சிறந்த ஓவிய, சிற்பக் கலைஞர்களுக்கு ரூ.10,000 பரிசு: தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை அறிவிப்பு! விண்ணப்பிக்க கடைசி நாள் அக்.20
சிறந்த ஓவிய, சிற்பக் கலைஞர்களுக்கு ரூ.10,000 பரிசு: தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை அறிவிப்பு! விண்ணப்பிக்க கடைசி நாள் அக்.20
சென்னை: : தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை சார்பில் சிறந்த ஓவிய, சிற்பக் கலையாசிரியர்கள் மற்றும் நூலாசிரியர்களுக்கு விருது மற்றும் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,
*பரிசு விவரங்கள்:*
ஓவியம் மற்றும் சிற்பக் கலைத் துறையில் சிறந்து விளங்கும் 10 கலையாசிரியர்கள் மற்றும் சிறந்த கலை நூல்களைப் பதிப்பித்த 10 நூலாசிரியர்களுக்கு தலா ரூ.10,000/- மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.
*விண்ணப்பிக்க கடைசி நாள்:* அக்டோபர் 20, 2026
*விண்ணப்பிக்க:*
http://www.artandculture.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.
*விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:*
இயக்குநர், கலை பண்பாட்டுத்துறை,
தமிழ் வளர்ச்சி வளாகம், 2-வது தளம்,
தமிழ்ச் சாலை, எழும்பூர்,சென்னை - 600 008.
கலைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு கலை பண்பாட்டுத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
tamilanda