தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தூத்துக்குடியில் தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த திருச்சிற்றம்பலம் ஏற்பாட்டில் 39 வது வார்டில் தூய்மைப் பணியாளர்களுக்கு புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்புகள் மற்றும் ரொக்கப் பணம் உள்ளிட்ட தீபாவளி பரிசுப் பொருட்களை மாவட்ட இணை செயலாளர் கோல்டன் வழங்கினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில இணைப் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் தூத்துக்குடி மத்திய மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான ஸ்ரீநாத் ஆகியோரின் ஆலோசனையின்படி, தூத்துக்குடி மத்திய மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பில், திருச்சிற்றம்பலம் ஏற்பாட்டில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

தூத்துக்குடி சிவன் கோவில் கீழரத வீதியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கட்சியின் மாவட்ட இணைச் செயலாளர் கோல்டன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு தூய்மைப் பணியாளர்களுக்கு புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்புகள் மற்றும் ரொக்கப் பணம் உள்ளிட்ட பரிசுப் பொருட்களை வழங்கினார்.

மேலும், பொதுமக்களின் நலனுக்காக நாள்தோறும் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்களின் சேவையைப் பாராட்டி, அவர்களுக்கு சால்வை அணிவித்து திருச்சிற்றம்பலம் கௌரவித்தார். தொடர்ந்து, அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டு, மகிழ்ச்சியுடன் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாட வாழ்த்தினார்.

தூய்மைப் பணியாளர்களின் உழைப்பையும் சேவையையும் போற்றும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.