சாத்தான்குளம் அருகே பயங்கரம்: 15 வயது சிறுமியை காதலித்த விவகாரத்தில் தாய் வெட்டிக்கொலை - 4 மணி நேரத்தில் குற்றவாளி கைது

சாத்தான்குளம் அருகே பயங்கரம்: 15 வயது சிறுமியை காதலித்த விவகாரத்தில் தாய் வெட்டிக்கொலை - 4 மணி நேரத்தில் குற்றவாளி கைது

சாத்தான்குளம் அருகே பயங்கரம்: 15 வயது சிறுமியை காதலித்த விவகாரத்தில் தாய் வெட்டிக்கொலை - 4 மணி நேரத்தில் குற்றவாளி கைது

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே முதலூரில் 15 வயது சிறுமியை காதலித்த விவகாரத்தில், அவரது தாய் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தின் பின்னணி:

சாத்தான்குளம் அருகே முதலூர் கிராமத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் (50) குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவரது மனைவி மேரி ரெஜிலா (39).

அதே பகுதியைச் சேர்ந்த ஞானப்பிரகாஷ் (23) என்பவர், முத்துகிருஷ்ணனின் மூத்த மகளான 15 வயது சிறுமியை பின்தொடர்ந்து வந்துள்ளார். இதனை அறிந்த சிறுமியின் தாய் கண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஞானப்பிரகாஷ், அக்டோபர் 23 அன்று அதிகாலை முத்துகிருஷ்ணன் வீட்டிற்குள் புகுந்து ஆயுதத்தால் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

இந்த கொடூர தாக்குதலில் தாய் மேரி ரெஜிலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தந்தை முத்துகிருஷ்ணன் மற்றும் 10 வயது மகன் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தாக்குதலுக்கு பின் 2 சிறுமிகளை கடத்திச் சென்றதாகவும் தகவல் வெளியானது.

*4 மணி நேரத்தில் போலீஸ் அதிரடி:*

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு திருநெல்வேலி சரக DIG திரு. திருநாவுக்கரசு, தூத்துக்குடி மாவட்ட SP சிவபிரசாத் ஆகியோர் நேரில் வந்து விசாரணை நடத்தினர்.

தட்டார்மடம் காவல் நிலைய போலீசார் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதன் பயனாக சம்பவம் நடந்த 4 மணி நேரத்திற்குள் குற்றவாளி ஞானப்பிரகாஷை போலீசார் கைது செய்தனர். கடத்தப்பட்டதாக கூறப்பட்ட 2 சிறுமிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இச்சம்பவம் குறித்து தட்டார்மடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

#Thoothukudi Crime, #Sathankulam #Murder, #Police #Arrest, Thoothu