மாணவர்களிடமிருந்து வினாத்தாள் கட்டணம் வசூலிக்க இடைக்காலத் தடை! மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மாணவர்களிடமிருந்து வினாத்தாள் கட்டணம் வசூலிக்க இடைக்காலத் தடை! மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மாணவர்களிடமிருந்து வினாத்தாள் கட்டணம் வசூலிக்க இடைக்காலத் தடை! மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தமிழ்நாடு அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடமிருந்து வினாத்தாள் கட்டணம் என்ற பெயரில் தொகை வசூலிக்கப்படுவது தொடர்பாக, தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஆ. மலைக்கொழுந்தன் தொடர்ந்த வழக்கில், மாணவர்களிடம் இருந்து வினாத்தாள் கட்டணம் எதுவும் பெறக் கூடாது என மதுரை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

மேலும், இவ்விவகாரம் தொடர்பாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை விசாரணை மேற்கொள்ளவும், தமிழக அரசு பதிலளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

*தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் வெளிச்சத்திற்கு வந்த விவகாரம்:*

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடமிருந்து வினாத்தாள் கட்டணம் என்ற பெயரில் ஆண்டுதோறும் கோடிக்கணக்கான ரூபாய் வசூலிக்கப்படுவதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக, உரிய அரசாணைகள், சட்டப்பூர்வ ஆவணங்கள் குறித்து RTI மூலம் கேள்வி எழுப்பி வந்தது சங்கம். அதன் தொடர்ச்சியாகவே இந்த வழக்கு மாநில அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

மாணவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் இந்த தீர்ப்புக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.