தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு ஆங்கிலத்தில் உணவுச்சீட்டு - தமிழன்டா இயக்கம் கடும் கண்டனம்!
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு ஆங்கிலத்தில் உணவுச்சீட்டு - தமிழன்டா இயக்கம் கடும் கண்டனம்!
தூத்துக்குடி:
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், உள்நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவுச்சீட்டு ஆங்கிலத்தில் மட்டுமே வழங்கப்படுவது கண்டிக்கத்தக்கது என தமிழன்டா இயக்கம் வன்மையாக கண்டித்துள்ளது.
தமிழக அரசு மருத்துவமனைக்கு வரும் பெரும்பாலான நோயாளிகள் கிராமப்புறங்களைச் சேர்ந்த, தமிழ் மட்டுமே தெரிந்த சாமானிய மக்கள். அவர்களுக்கு ஆங்கிலத்தில் உணவுச்சீட்டு வழங்குவதால், என்ன உணவு, எப்போது, எவ்வளவு என்பதை புரிந்துகொள்ள முடியாமல் நோயாளிகளும், அவர்களது உறவினர்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழன்டா இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"தமிழ்நாட்டில், தமிழ் தான் ஆட்சி மொழி. அரசு மருத்துவமனையில் தமிழில் தான் அனைத்து விவரங்களும் இருக்க வேண்டும். நோயாளிகளின் உயிர் சம்பந்தப்பட்ட உணவு விஷயத்தில் கூட ஆங்கிலத்தை திணிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.
ஆங்கிலம் தெரியாத ஏழை நோயாளிகள், உணவுச்சீட்டில் என்ன எழுதியிருக்கிறது என்று தெரியாமல், மற்றவர்களிடம் கேட்டு தெரிந்துகொள்ளும் நிலை உள்ளது. இது மிகவும் வேதனையானது.
எனவே, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவுச்சீட்டை தமிழில் வழங்க வேண்டும். தமிழும், ஆங்கிலமும் சேர்ந்து இருந்தாலும் கூட பரவாயில்லை, ஆனால் தமிழ் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
இதனை உடனடியாக சரிசெய்யாவிட்டால், தமிழன்டா இயக்கம் சார்பில் மருத்துவமனை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
tamilanda