தூத்துக்குடி தாளமுத்துநகர் கொலை வழக்கில் பரபரப்பு திருப்பம் - 6 மணி நேரத்தில் 4 பேர் கைது! போலீஸ் அதிரடி!

தூத்துக்குடி தாளமுத்துநகர் கொலை வழக்கில் பரபரப்பு திருப்பம் - 6 மணி நேரத்தில் 4 பேர் கைது! போலீஸ் அதிரடி!

தூத்துக்குடி தாளமுத்துநகர் கொலை வழக்கில் பரபரப்பு திருப்பம் - 6 மணி நேரத்தில் 4 பேர் கைது! போலீஸ் அதிரடி!                             தூத்துக்குடி, நவ் 1:

தூத்துக்குடி மாவட்டத்தையே உலுக்கிய தாளமுத்துநகர் கொலை வழக்கில் தூத்துக்குடி போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சம்பவத்தின் பின்னணி:

இன்று (01.11.2026) காலை தூத்துக்குடி நகரம் தாளமுத்துநகர் பகுதியில், தனிப்பட்ட முன்விரோதம் மற்றும் பேனர் வைப்பது தொடர்பாக இரு தரப்பினரிடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த வாய்த்தகராறு முற்றி, சேதுபாதை ரோடு பகுதியில் உள்ள அ.சண்முகபுரம் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட வந்த சோட்டையன் தோப்பு பகுதியைச் சேர்ந்த செல்லத்துரை மகன் பாலா என்ற பாலமுருகன் (40) என்பவரை மர்ம கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளது.

இந்த கொடூர கொலை சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியது. தகவலறிந்ததும் உயிரிழந்தவரின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.*உயர் அதிகாரிகள் நேரில் விசாரணை:*

சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *சிவபிரசாத் IPS* மற்றும் திருநெல்வேலி சரக போலீஸ் டி.ஐ.ஜி * திருநாவுக்கரசு IPS* ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் விரைந்து விசாரணை நடத்தினர்.

*6 மணி நேரத்தில் 4 பேர் கைது - போலீஸ் அதிரடி:*

இந்த கொலை வழக்கில் தொடர்புடைய எதிரிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் துரிதமாக செயல்பட்டு சம்பவம் நிகழ்ந்த *6 மணி நேரத்திற்குள்* 4 பேரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் விவரம்:

1. சிவச்சந்திரன்

2. சிவகுமார்

3. மணிகண்டன்

4. ரவி

கைது செய்யப்பட்ட 4 பேரும் தூத்துக்குடி வடக்கு காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

*தொடர் விசாரணை: :இந்த கொலைக்கான முழு பின்னணி குறித்து போலீசார் தொடர்ந்து புலன் விசாரணை நடத்தி வருகின்றனர். அசம்பாவிதங்களை தவிர்க்க தாளமுத்துநகர் மற்றும் அ.சண்முகபுரம் பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

*Tags: #ThoothukudiMurder #Thalamuthunagar #ThoothukudiPolice #Arrest #DIGThirunavukarasu #OneTamilNews*