தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் நியமனம் - தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் MP அறிவிப்பு!
தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் நியமனம் - தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் MP அறிவிப்பு!
சென்னை, அக்.28:
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் நேற்று (27.10.2026) தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் தலைவர்கள் மற்றும் மண்டல ஒருங்கிணைப்பாளர்களை நியமித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் *கே. பெருமாள்சாமி* அவர்களுடன் கலந்தாலோசித்து, மாவட்ட பார்வையாளர் பி. ஜேம்ஸ், தெற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் வி.ஆர். சிவராமன் மற்றும் இயக்க மறுசீரமைப்பு மாநில ஒருங்கிணைப்புக் குழு தலைவர் சா. பீட்டர் அல்போன்ஸ், ஆகியோரால் பரிந்துரைக்கப்பட்ட பட்டியலுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நியமனத்திற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான *ராகுல் காந்தி* மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் *மல்லிகார்ஜுன் கார்கே* ஆகியோரின் வழிகாட்டுதலின்படி நியமிக்கப்பட்டவர்கள், இந்திய தேசிய காங்கிரஸின் கொள்கைகளை ஏற்று செயல்படுவார்கள் என நம்புவதாக காங்கிரஸ் கட்சி தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
*முக்கிய நிர்வாகிகள் விவரம்:*
*பொருளாளர்:* K.P. ஆழ்வார்சாமி
*துணைத் தலைவர்கள் (10 பேர்):*
N. சேதுராம பாண்டியன், S. வேலாயுதசாமி, P. கிருஷ்ணன், A. மாரிமுத்து, D. சாமுவேல் ஞானதுரை, R. ராஜசேகரன், J. மகேஷ் குமார், S. பெத்துராஜ், A.X. ஜேம்ஸ் லாரன்ஸ், G. அனிதா
*பொதுச்செயலாளர்கள் (10 பேர்):* S. ராஜாராம், A. விஜய், S.M.T.S. ராஜா, K. துரைராஜ், S.T. எட்வர்ட் ராஜ், M. நல்ல மதி, T.P. அரிபாலகிருஷ்ணன், G. அப்பணசாமி, P. சோலைராஜ், A. ராமர்
மேலும் செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள், அரசியல் விவாதக் குழு (24 பேர்), ஒன்றிய, நகர, பேரூர் தலைவர்கள் 16 பேர் மற்றும் 28 மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
*ஒன்றிய, நகர, பேரூர் தலைவர்கள்:*
ஓட்டப்பிடாரம் - K. ஆறுமுகசாமி, தூத்துக்குடி ஒன்றியம் - N. முருகன், கருங்குளம் - A. ரவி, கோவில்பட்டி ஒன்றியம் - C. மேஷ் மூர்த்தி, தூத்துக்குடி நகரம் - J. முத்து ரதி, கோவில்பட்டி நகரம் - KTP அருண் பாண்டியன் உள்ளிட்ட 16 பேர் நியமனம்.
*மண்டல பொறுப்பாளர்கள்:*
கல்பை பட்டி முதல் வடக்கார்சேரி வரை 28 மண்டலங்களுக்கு வாக்குச்சாவடி வாரியாக பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
tamilanda