தமிழகம் முழுவதும் கிராம ஊராட்சிகளில் நிர்வாக மாற்றம்! 37 மாவட்டங்களில் Zonal Deputy BDO-க்களே இனி தனி அலுவலர்கள்! - தமிழக அரசு அதிரடி
தமிழகம் முழுவதும் கிராம ஊராட்சிகளில் நிர்வாக மாற்றம்! 37 மாவட்டங்களில் Zonal Deputy BDO-க்களே இனி தனி அலுவலர்கள்! - தமிழக அரசு அதிரடி
சென்னை: தமிழகத்தில் பதவிக்காலம் முடிவடைந்துள்ள கிராம ஊராட்சிகளின் நிர்வாகம் தொடர்பாக தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஏற்கனவே 28 மாவட்டங்களிலும், தற்போது பதவிக்காலம் முடிவடைந்துள்ள 9 மாவட்டங்களிலும் என *மொத்தம் 37 மாவட்டங்களில்*, புதிதாக உருவாக்கப்பட்ட 93 கிராம ஊராட்சிகளைத் தவிர்த்து, மற்ற அனைத்து கிராம ஊராட்சிகளுக்கும் *மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களே (Zonal Deputy Block Development Officers) தனி அலுவலர்களாக* செயல்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், இதுவரை வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) - *BDO (VP) தனி அலுவலராக செயல்பட்டு வந்த நடைமுறை மாற்றப்பட்டுள்ளது.* இனி மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களே அந்த பொறுப்பினை வகிப்பார்கள்.
இந்த புதிய நடைமுறை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
*#TamilNadu #GramPanchayat #BDO #ZonalDeputyBDO #PanchayatElection #OneTamilNews #BREAKING
????தமிழகம் முழுவதும் 37 மாவட்ட கிராம ஊராட்சிகளில் மாற்றம்! BDO (VP) முறை ரத்து - இனி Zonal Deputy BDO-க்களே தனி அலுவலர்கள்! தமிழக அரசு உத்தரவு. #TNLocalBody
-
tamilanda