என் முதல் படத்தின் இசை நாயகன்... ஆசான் தேவா சாருக்கு இதயப்பூர்வமான அஞ்சலி - இயக்குநர் Shiva Rahul உருக்கம்
என் முதல் படத்தின் இசை நாயகன்... ஆசான் தேவா சாருக்கு இதயப்பூர்வமான அஞ்சலி - இயக்குநர் Shiva Rahul உருக்கம்
தமிழ் திரையிசையின் தேனிசை தென்றல் தேவா அவர்கள் இன்று (17.10.2026) காலமானார் என்ற செய்தி திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 75 வயதான அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், திரைப்பட இயக்குநர் *Shiva Rahul* தனது இதயப்பூர்வமான அஞ்சலியை தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: "உங்களோடு பணியாற்றிய நினைவுகள் வாழ்நாள் முழுக்க என் நினைவில் நிற்கும். எனக்கு ஒரு நல்ல நண்பராகவும், வழிகாட்டியாகவும் துணை நின்றவர் நீங்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், முதலமைச்சர் விஜய், கமல்ஹாசன், சூர்யா, தனுஷ் போன்ற மாபெரும் ஆளுமைகளின் வெற்றிப் பாடல்களைக் கேட்டு வளர்ந்த எனக்கு, உங்களோடு இணைந்து பணியாற்றிய போது உங்களின் தன்னலமற்ற எளிமையும் துளியும் கர்வமில்லாத குணமுமே பெரும் பாடமாக அமைந்தது. என் முதல் படத்திலும், இப்போது இயக்கும் படத்திலும் ஆரம்பத்திலிருந்தே என்னோடு பயணித்த என் இசையமைப்பாளர், தேவா சார்...Miss you"
> இப்படிக்கு —
> திரைப்பட இயக்குநர்
> *Shiva Rahul*
தேவா அவர்கள் அண்ணாமலை, பாட்ஷா உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து, சென்னை கானா இசையை திரையிசையில் பிரபலமாக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
*ONE TAMIL NEWS* சார்பாக தேவா சாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
.
tamilanda