சென்னை சில்க்ஸ் மற்றும் தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கம் இணைந்து நடத்தக்கூடிய மாபெரும் புத்தக கண்காட்சி வரும் 27ம் தேதி தூத்துக்குடியில் நடைபெறுகிறது.
சென்னை சில்க்ஸ் மற்றும் தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கம் இணைந்து நடத்தக்கூடிய மாபெரும் புத்தக கண்காட்சி வரும் 27ம் தேதி தூத்துக்குடியில் நடைபெறுகிறது.
தூத்துக்குடியில் வரும் 27ஆம் தேதி புத்தக் கண்காட்சி தொடங்கி அடுத்த மாதம் 6ம் தேதி வரை தொடர்ந்து 11 நாட்கள் நடைபெற உள்ளது. 25 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. 10 லட்சம் புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளது. தமிழ், ஆங்கிலம், இலக்கியம், அறிவியல், பொது அறிவு, போட்டி தேர்வு உள்ளிட்ட அனைத்து புத்தகங்களும் இந்த கண்காட்சியில் இடம்பெற உள்ளது.
கண்காட்சியின் நோக்கம் மாணவர்களுக்கு வாசிப்பு திறன் புத்தகம் படிப்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளோம்.
வரும் 27 ஆம் தேதி காலை புத்தக கண்காட்சி துவக்க விழா நடைபெறுகிறது. மாநகராட்சி ஆணையர் பிரியங்கா தலைமையில், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி இந்த புத்தக கண்காட்சியை திறந்து வைக்க உள்ளார். மாணவ மாணவிகளுக்காக தினசரி கட்டுரை போட்டி திருக்குறள் போட்டி ஓவியப்பட்டி கதை எழுத போட்டி என பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளது.
தமிழ்நாடு புத்தக விற்பனையாளர் சங்கம் இதுவரை 200க்கும் மேற்பட்ட கண்காட்சிகளை நடத்தி உள்ளது என தமிழ்நாடு புத்தக விற்பனையாளர் சங்கத்தின் சார்பில் ராஜபாண்டி மற்றும் ரவிவர்மன் ஆகியோர் தெரிவித்தனர்.
tamilanda