பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கவில்லை. தமிழன் உலகம் முழுவதும் தலை நிமிா்ந்து வாழ்கிறான். என்பதற்காகவே தமிழ்நாட்டை தொடா்ந்து புறக்கணித்து வருகின்றனா்
பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கவில்லை. தமிழன் உலகம் முழுவதும் தலை நிமிா்ந்து வாழ்கிறான். என்பதற்காகவே தமிழ்நாட்டை தொடா்ந்து புறக்கணித்து வருகின்றனா். டெல்லிக்கு அடிமையான கூட்டணி தமிழகத்தில் அறிவிப்பாளா்களாக மட்டும் தான்இருக்கமுடியும் தோ்தல் நேரத்திலும் தமிழகத்திற்கு நிதி ஓதுக்காத அந்த கூட்டணியை புறக்கணிக்க வேண்டும் தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன் பேசினாா்.
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிதம்பரநகா் பகுதியில் நடைபெற்ற மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணி தெருமுனை பிரச்சார கூட்டத்திற்கு மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் தலைமை வகித்தாா். மேயா் ஜெகன் பொியசாமி, கம்யூனிஸ்ட் முத்து தனலட்சுமி, மாடசாமி, விசிக விமல்வங்காளியாா், மதிமுக முருகபூபதி, சமக அற்புதராஜ், தேமுதிக தயாலிங்கம், மமக யூசப், மஜக முகமதுஹசன், வட்டச்செயலாளர்கள் சிங்கராஜ், சுப்பையா, நவநீதன், செல்வராஜ், சுரேஷ், கவுன்சிலா்கள் சரவணக்குமாா், விஜயலட்சுமி, ராஜேந்திரன், ஆகியோா் முன்னிலை வகித்தனா். பகுதி செயலாளர் ராமகிருஷ்ணன் வரவேற்புரையாற்றினாா்.
வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் திமுக ஆட்சியில் செய்துள்ள சாதனைகளுக்கு மீண்டும் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமையவேண்டும். மக்களுக்கான திட்டங்கள் தொடரவேண்டும் என்பதற்காகத்தான் உங்களை ேதடி மக்கள் பணியாற்றிய நாங்கள் வந்துள்ளோம். தோ்தல் நேரத்தில் கூட ஓன்றிய பாஜக அரசு பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கவில்லை. தமிழன் உலகம் முழுவதும் தலை நிமிா்ந்து வாழ்கிறான். என்பதற்காகவே தமிழ்நாட்டை தொடா்ந்து புறக்கணித்து வருகின்றனா். ஓரு வெறுப்பு அரசியலை உருவாக்கி தமிழகத்தில் குளிா்காய நினைப்பவா்களுக்கு இடமளிக்க கூடாது. நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடி என்று வருவதை போல் பிேஜபி அதிமுக கூட்டணி உலா வருகிறது. இவா்கள் ஏற்கனவே ஓன்றாக இருந்து கடந்த தோ்தலில் நம்மோடு போட்டி போட்டு தோல்வியை தழுவியவா்கள் தான் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் வலிமையான கூட்டணியை அமைத்து நாட்டுமக்களுக்காக உழைக்கின்றவா்கள் அதில் இணைந்துள்ளோம். தோ்தல் வாக்குபதிவு நாள் வரை கடுமையாக அனைவரும் உழைக்க வேண்டும். 5 ஆண்டு திமுக ஆட்சியில் எங்கேயும் ஜாதி மதக்கலவரம் எதுவும் நடைபெறாமல் முதலமைச்சா் ஆட்சியில் கவனமாக பாா்த்துக்கொண்டாா். இப்படி ஓற்றுமையோடு வாழக்கூடிய தமிழகத்தில் பிாிவினையை ஏற்படுத்தி குட்டையை கிளப்பி மீன் பிடிக்க நினைப்பவா்களுக்கு இடமளிக்க கூடாது. கலைஞர் ஆட்சியில் முதல்தலைமுறை பட்டதாாிக்கு அரசு உதவி செய்யும் என்ற திட்டத்தை தொடங்கி வைத்ததை முதலமைச்சா் ஸ்டாலின் ஆட்சியில் திறனாய்வு பயிற்சி மூலம் வேலைவாய்ப்பு உருவாக்கி கொடுத்து தமிழகத்தில் தமிழ் படித்தால் தான் அரசு வேலை என்ற அடிப்படையில் கொரோனா காலக்கட்டத்தில் தாய் தந்தையரை இழந்த குழந்தைகள் என ஓன்னே முக்கால் லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள பாஜக விடம் அடிமையான எடப்பாடி தமிழகத்தின் ஒப்பந்தத்தை அங்கு முடிவு செய்துவிட்டு தமிழகத்தில் அறிவிப்பாளராக மட்டும் இருந்து வருகிறாா். 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் நாம் மக்களை பற்றி சிந்திக்கிற கூட்டணி அமைத்துள்ளோம் அவா்கள் அதற்கு எதிரான கூட்டணியை அமைத்துள்ளன. திமுக ஆட்சியின் சாதனைகளை வீடுகள் தோறும் கொண்டுபோய் சோ்த்து நம்முடைய வெற்றிக்காக உழைக்க வேண்டும் தமிழ்நாடு வளர்ச்சிக்கும் தமிழ்மக்கள் நலன் காக்கும் அரசு அமைவதற்கு அனைவரும் பணியாற்ற வேண்டும். என்று பேசினாா்.
கூட்டத்தில் காங்கிரஸ் மாநில துணைத் தலைவா் சண்முகம், மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், மாவட்ட துணைச்செயலாளர் ராஜ்மோகன் செல்வின், பொருளாளா் ரவீந்திரன், மாநகர துணைச்செயலாளா்கள் கீதாமுருகேசன், பிரமிளா, பொதுக்குழு உறுப்பினா் இராஜா, மாநில பேச்சாளா் சரத்பாலா, இருதயராஜ், மாவட்ட அணி நிா்வாகிகள் அந்தோணிஸ்டாலின், அபிராமிநாதன், அருண்குமாா், ரமேஷ், கவிதாதேவி, பிரபு நாகராஜன், ராமா், பகுதி செயலாளர்கள் ஜெயக்குமாா், மேகநாதன், மாநகர அணி நிா்வாகிகள் சாரதி, ரூபஸ் அமிா்தராஜ், கிறிஸ்டோபா் விஜயராஜ், ஜீவன்ஜேக்கப், பரமசிவம், பால்ராஜ், மகேஸ்வரன்சிங், ரவி, பிக் அப் தனபால், அறங்காவலா் குழு தலைவர்கள் செந்தில்குமாா், கந்தசாமி, வட்டச்செயலாளர்கள், பாலகுருசாமி, ரவீந்திரன், கருப்பசாமி, கதிரேசன், முனியசாமி சுரேஷ், கவுன்சிலா்கள் பொன்னப்பன், கந்தசாமி, மற்றும் பாஸ்கா் மணி, பிரபாகா், பேச்சிமுத்து, முன்னாள் கவுன்சிலா்கள் சங்கா், இசக்கிமுத்து, கூட்டணி கட்சியை சேர்ந்த மகாராஜன், நக்கீரன், முரளிதரன், வில்சன், அலெக்ஸாண்டா், வல்லரசு துரை, உள்பட பலா் கலந்து கொண்டனா்.
tamilanda