மாற்றுத்திறன் குழந்தைகளுக்காக உலக சாதனை முயற்சி - தூத்துக்குடி இளைஞர் 4.39 மணி நேரத்தில் 1000 Pull-ups, 1000 Squash Drives சாதனை! தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி துணைத் தலைவர் ராஜா பங்கேற்று வாழ்த்து
#தூத்துக்குடி, நவ.02:*
மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு நிதி திரட்டும் உயரிய நோக்கத்திற்காக, தூத்துக்குடியைச் சேர்ந்த இளைஞர் *J.ஜோஷ்வா வசிகரன்* உலக சாதனை படைத்துள்ளார்.
4.39 மணி நேரத்திற்குள் 1,000 Pull-ups மற்றும் 1,000 Squash Drives* செய்து இவர் சாதனை படைத்துள்ளார். இந்த சாதனை முயற்சி *Cholan Book of World Records (CBWR)* மற்றும் *International Achiever Book of World Records*-ல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு இன்று காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை, தூத்துக்குடி முத்தம்மாள் காலனியில் உள்ள *GAMESVILLE ஸ்போர்ட்ஸ் அகாடமி*யில் வைத்து நடந்தது.
இந்த நிகழ்விற்கு *தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி துணைத் தலைவர் ராஜா* தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். கேம்ஸ் வில்லே ஸ்போர்ட்ஸ் அகாடமி நிர்வாக இயக்குனர் *பாரதி* முன்னிலை வகித்தார்.
நிகழ்வில் பிசியோதெரபிஸ்ட் *டாக்டர் பாபு செல்வகுமார்* மற்றும் *டாக்டர் ஜோன் ஜெனிபர்* ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். விழாவிற்கான ஏற்பாடுகளை கேம்ஸ் வில்லே ஸ்போர்ட்ஸ் அகாடமி நிறுவன தலைவர் *ரைபின் தார்ச்சியூஸ்* செய்திருந்தார்.
நிகழ்வில் *லூசியா பார்வையற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கும், நாசரேத் செவித்திறன் குறையுடையோர் பள்ளி மாணவச் செல்வங்களுக்கும்* நல உதவிகள் வழங்கப்பட்டது. இதில் தலைமை ஆசிரியை *ஜெசி* பங்கேற்றார்.
உடல் மற்றும் மன ரீதியாக சவால்களை எதிர்கொள்ளும் குழந்தைகளுக்காக நிதி திரட்டும் இந்த இளைஞரின் முயற்சி பாராட்டத்தக்கது.
*செய்தி: ONE TAMIL NEWS | http://www.onetamilnews.com*
*தூத்துக்குடி செய்திகளுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள்.*
tamilanda