பள்ளிகளில் இனி வாரத்தில் 3 நாட்கள் கட்டாய PT பீரியட் - அமைச்சர் அறிவிப்பு*
பள்ளிகளில் இனி வாரத்தில் 3 நாட்கள் கட்டாய PT பீரியட் - அமைச்சர் அறிவிப்பு*
சென்னை, அக்.13:
தமிழகத்தில் 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கான திருத்திய புதிய பாட அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் இன்று வெளியிட்டார்.
அதன்படி, பள்ளிகளில் வாரத்தில் 3 நாட்கள் PET (உடற்கல்வி) வகுப்புகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.
*புதிய பாடவேளை விவரம்:*
- 1 முதல் 5-ம் வகுப்பு வரை: வாரத்தில் 90 நிமிட பாடவேளை
- 6 முதல் 10-ம் வகுப்பு வரை: தலா 45 நிமிடம் வீதம் 3 பாடவேளைகள்
- 11, 12-ம் வகுப்புகளுக்கு: புதிய அட்டவணையில் வாரத்தில் 2 PET வகுப்புகள்
பள்ளிகள் காலை 9.30 மணி முதல் மாலை 4.10 மணி வரை செயல்படும் என்றும், மாணவர்களின் இணை செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
---
tamilanda