விவசாயிகள் டிராக்டர்களுக்கு போதிய டீசல் - முன்னேற்ற சங்கம் கோரிக்கை

adequate-diesel-for-farmers-tractors-—-progress-association-requests

விவசாயிகள் டிராக்டர்களுக்கு போதிய டீசல் - முன்னேற்ற சங்கம் கோரிக்கை

விவசாயிகள் டிராக்டர்களுக்கு போதிய டீசல் - முன்னேற்ற சங்கம் கோரிக்கை

 தமிழ்நாடு விவசாயிகள் முன்னேற்ற சங்க நிர்வாகக் குழுக் கூட்டம் தலைவர் அய்கோ தலைமையில் நெல்லை தாமிரபரணி பாதுகாப்பு இயக்க அலுவலகத்தில் நடந்தது. துணைத் தலைவர் ஜோதிமணி முன்னிலை வகித்தார். வேளாண்மை துறை அதிகாரி ஆனந்த், அரசிகள் கூட்டமைப்புத் தலைவி குயிலி நாச்சியார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

 கூட்டத்தில், தொலைதூரத்தில் இருந்து டிராக்டர்களுக்கு டீசல் வாங்க நகரத்திற்கு வரும் விவசாயிகளுக்கு கேனில் டீசல் நிரப்பிக் கொடுக்க வேண்டும். நகை ஈட்டுக் கடன் கிராமுக்கு ரூ. 7,000 என்பதை கூட்டுறவு சங்கங்கள் அனைத்திலும் நடைமுறைப்படுத்த வேண்டும். வேளாண்மை கடன்கள், மானியத்தில் வேளாண்மை உபகரணங்கள் ஆகியவை மிகவும் அவசியமான அரசின் செயல்பாடுகள் என்பதனால், தேர்தலைக் காரணம் காட்டி அவற்றை நிறுத்தக்கூடாது. நிதி ஆண்டு முடிவு என்று காரணம் காட்டி மார்ச் மாதம் கடன் கொடுப்பதை கூட்டுறவு சங்கங்கள் மறுத்தால், அவற்றின் முன்பு மறியல் செய்ய நேரிடும்.என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 கூட்டத்தில், மாநில நிர்வாகிகள் ஜெயக்குமார் சண்முகவேல், ஜெகதீஷ் தங்கராஜ், சுபாஷ் சந்திர போஸ், எஸ்தர், மாவட்ட நிர்வாகிகள் சாந்தி, பபிதா, செல்வ சிங்,தாமிரபரணி பாதுகாப்பு இயக்க நிர்வாகிகள் செல்வகுமார், மணிகண்டன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.