அன்றாடப் பிரச்சினைகளுக்கான அறிவியல் சார்ந்த பொருளாதார அணுகுமுறை – போப் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான ஒருநாள் நிகழ்ச்சி
அன்றாடப் பிரச்சினைகளுக்கான அறிவியல் சார்ந்த பொருளாதார அணுகுமுறை – போப் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான ஒருநாள் நிகழ்ச்சி
சாயர்புரம், அக்டோபர் 24, 2026:
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட சாயர்புரம் போப் கல்லூரியின் (தன்னாட்சி) முதுகலை மற்றும் ஆராய்ச்சிப் பொருளாதாரத் துறை சார்பில், “அன்றாடப் பிரச்சினைகளுக்கான அறிவியல் சார்ந்த பொருளாதார அணுகுமுறை” (Scientific Economic Approach to Day-to-Day Problems) என்ற தலைப்பில் பள்ளி மாணவர்களுக்கான ஒருநாள் நிகழ்ச்சி 24.10.2026 அன்று கல்லூரி கருத்தரங்கக் கூடத்தில் நடைபெற்றது.இந்நிகழ்சியின் ஆரம்ப ஜெபம் பேராசிரியை முனைவர். விக்டோரியா செய்தார்.வரவேற்பு உரை துறை தலைவர் முனைவர் தினகரன் வழங்கினார்.
கல்லூரி முதல்வர் முனைவர்.சாந்தினி கிரேஸ் தலைமை தாங்கினார்.
இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், பள்ளி மாணவர்களிடையே அன்றாட வாழ்க்கையில் பொருளாதாரத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், அறிவியல் சிந்தனை, பகுப்பாய்வுத் திறன் மற்றும் நடைமுறைப் பிரச்சினைகளைத் தீர்க்கும் திறன்களை வளர்ப்பதும் ஆகும். பொருளாதாரக் கருத்துகளை எளிமையாகப் புரிந்துகொள்ளும் வகையில் கண்காட்சி மற்றும் ஊடாடும் செயல்பாடுகள் இடம்பெற்றன. சாயர்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 12 பள்ளிகளில் இருந்து 180-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் சாயர்புரம் பேரூராட்சியின் 15-ஆவது வார்டு மன்ற உறுப்பினர் திருமதி ஜெ. ஜெபதங்கம் பிரேமா அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். மதுரை கருமாத்தூரில் உள்ள அருள் ஆனந்தர் கல்லூரியின் பொருளாதாரத் துறை உதவிப் பேராசிரியர் திரு பி. பாக்கிய கணேஷ் பாண்டி அவர்கள் வளவாளராகக் கலந்துகொண்டு, பொருளாதாரக் கருத்துகளின் நடைமுறைப் பயன்பாடுகளை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
இந்நிகழ்ச்சியின் சிறப்பம்சமாகப் பெருளாதரத்தில் உள்ள நடைமுறை பிரச்சினைகளை கண்காட்சி முறையாக துறை மாணவ மாணவிகள் விளங்கினார்கள் . மேலும் பள்ளி மாணவர்களுக்கான வினாடி வினாப் போட்டி நடைபெற்றது இதில் 12 பள்ளிகள் கலந்துகொண்டனர்.இறுதியாக முதல் பரிசை பணிக்கநாடார் குடியிருப்பு கணோசர் மேல் நிலைப்பள்ளியும் இரண்டாம் பரிசை புதியம்புத்தூர் பிரசன்னா மெட்ரிக் பள்ளியும் மூன்றாம் பரிசைப் சாயர்புரம் புனித மேரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியும் பெற்றனர்.பரிசுகளை கல்லூரி முதல்வர் வழங்கினார்.இந்நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை பேராசிரியர்கள் முனைவர் ஹெப்சிபா ஜுலீ ஜெயசிலி,முனைவர்.தனசீலி , முனைவர்.ஜானகி மற்றும் பேராசிரியர் பொன் சாம் அதிசய ராஜ் செய்திருந்தனர்.இந்நிகழ்சியை கல்லூரி செயலர் திரு.ஜெபர்சன் சாமுவேல் ராஜ் பாராட்டினார்கள்.
tamilanda