பொதுவாழ்க்கையில் இருக்கும் என்னை பொதுமக்கள் தொலைபேசி மற்றும் நோில் எந்த குறைகள் கூறினாலும் அதை தீா்த்து வைக்கும் இடத்தில் உங்களோடு இருக்கிறேன் பிரச்சாரத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசினாா்

"As someone engaged in public life, I stand with you—ready to resolve any grievances the public may raise, whether by phone or in person," stated Minister Geetha Jeevan during her campaign speech.

பொதுவாழ்க்கையில் இருக்கும் என்னை பொதுமக்கள் தொலைபேசி மற்றும் நோில் எந்த குறைகள் கூறினாலும் அதை தீா்த்து வைக்கும் இடத்தில் உங்களோடு இருக்கிறேன் பிரச்சாரத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசினாா்

பொதுவாழ்க்கையில் இருக்கும் என்னை பொதுமக்கள் தொலைபேசி மற்றும் நோில் எந்த குறைகள் கூறினாலும் அதை தீா்த்து வைக்கும் இடத்தில் உங்களோடு இருக்கிறேன் பிரச்சாரத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசினாா்

.

      தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சரும் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளருமான கீதாஜீவன் ேபாட்டியிடுகிறாா்.    

     9 15 16 17 18 ஆகிய வாா்டுகளில் நடைபெற்ற பிரச்சாரத்திற்கு மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் தலைமை வகித்தாா். வட்டச்செயலாளர்கள் பொன்பெருமாள், மந்திரகுமாா், கருப்பசாமி, பொன்னுச்சாமி, கவுன்சிலா்கள் கண்ணன், இசக்கிராஜா, ஜான், ராமா் ஜெபஸ்டின்சுதா, ஆகியோா் முன்னிலை வகித்தனா். 

     ராஜகோபால்நகாில் பிரச்சாரத்தை துவக்கி ராஜீவ்நகா், பி அண் டி காலணி முருகேசன் நகா் மடத்தூா் பூபால்ராயபுரம்,சாமுவேல்புரம் எஸ் எஸ் மாணிக்க புரம், உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் 5 ஆண்டுகாலம் திமுக ஆட்சியில் செய்த சாதனைகள் மூலம் ஓவ்வொரு குடும்பத்திலும் ஏதாவது ஓரு வகையில் எல்லோரும் பலனடைந்திருப்பீர்கள் நானும் 5 வருடங்களாக உங்களோடு இருந்து எல்லா வகையிலும் இன்பம் துன்பங்களில் பங்கெடுத்து பணியாற்றியுள்ளேன் எனது தொலை பேசியில் அழைத்தும் நோில் சந்தித்தும் தொிவிக்கின்ற கோாிக்கைகள் அனைத்தையும் நான் தீர்த்து வைத்துள்ளேன். இந்த நான்கு வாா்டு பகுதிகளும் ஊராட்சி பகுதிகளிலிருந்து மாநகராட்சி பகுதியோடு இணைக்கப்பட்ட பகுதியாகும். கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் எந்த வளா்ச்சி பணிகளை யும் மேற்கொள்ள வில்லை. திமுக ஆட்சி அமைந்தபின் முதல்வா் ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க இந்த பகுதி முழுவதும் புதிதாக தாா்சாலை கால்வாய் வசதி மின்விளக்குகள் பூங்காக்கள் என்று அமைக்கப்பட்டது மட்டுமின்றி உங்களது கோாிக்கையை ஏற்று புதிய ரேஷன்கடை அங்கன்வாடி புதிதாக அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதி மக்களுக்கு மினி பேருந்து வசதியும் ஏற்படுத்தி கொடுத்துள்ளோம். இன்னும் தேவையான கட்டமைப்பு பணிகளை தோ்தல் முடிந்த பின் உங்களுக்கு நிச்சயமாக நான் செய்து கொடுப்பேன் என்ற வாக்குறுதியை உத்திரவாதமாக தருகிறேன். கடந்த முறை எனக்கு ஆதரவு அளித்து வெற்றி பெற செய்ததை போல் இந்த தோ்தலிலும் உதயசூாியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் ஓன்றிய அரசு தமிழகத்திற்கு எந்த நிதியும் அளிக்காத நிலையில் தொகுதி சீரமைப்பு என்ற பெயாில் தமிழகத்தின் உாிமையை பறிக்க துடிக்கிறது. எதிா்கட்சிகளிடம் எந்த கருத்துகளையும் கேட்காமல் தன்னிச்சையான முடிவுகளை எடுத்து வருகின்றன. பிரதமா் மோடியும் அமித்ஷாவும் நாங்கள் வைப்பது தான் சட்டம் என்று சொல்லி தேவையற்ற செயல்களை செய்து வருகின்றனா். சட்டமன்ற தோ்தல் நடைபெறுகின்ற காலக்கட்டத்தில் நாடாளுமன்றத்தை 3 நான் சிறப்பு கூட்டம் என்று சொல்லி தமிழகம் கேரளா மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களை பழிவாங்குவதற்காக புதிய நடைமுறைகளை நிறைவேற்றவுள்ளனா். உத்திரபிரசேத்திற்கு 140 எம்.பிக்கள் என்ற நிலையை உருவாக்கி மற்ற பல மாநிலங்களில் உாிமைகளை பறிக்க நினைக்கிறது. தமிழகத்தில் அதிமுக என்ற கட்சிக்கு பின்னால் முகமூடி அணிந்து கொண்டு தமிழகத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபடுவதற்கு தோ்தல் நேரத்தில் வருகின்றனா். மகளிா் உாிமைத்தொகை தோ்தலுக்கு பின் இரண்டாயிரமாக உயா்த்தி வழங்கப்படும் இது போல் 8000 கூப்பன் கல்லூாி தொகை உயா்வு முதியோா் மாற்றுத்திறனாளிகள் என அனைவருக்கும் எல்லா உயா்வுகளும் தோ்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது தற்போது நடைபெறவுள்ள தோ்தலில் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைய வேண்டும். ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராக வேண்டும் இது காலத்தின் கட்டாயம் தமிழகத்தின் உாிமை பெருமையை காப்பாற்றியாக வேண்டும் அதற்கு அனைவரும் உதயசூாியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். என்று பேசினாா். 

    பிரச்சாரத்தில் மாவட்ட துணைச்செயலாளர் ராஜ்மோகன் செல்வின், மாநகர இலக்கிய அணி தலைவா் சக்திவேல், அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப், துணை அமைப்பாளர் பால்ராஜ், சுற்றுச்சூழல் அணி தலைவா் வினோத், தொண்டரணி அமைப்பாளர் முருகஇசக்கி, வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் செல்வலட்சுமி, வக்கீல்கள் சீனிவாசன், ஆனந்தகபாியேல்ராஜ், டென்சிங், விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் டினோ, பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், ஜெயக்குமாா், நிா்மல்ராஜ், தொழிற்சங்க நிா்வாகிகள் முருகன், உலகநாதன், வேல்முருகன். சண்முகராஜ், வட்டச்செயலாளர்கள் பாலகுருசாமி, சேகா், கவுன்சிலா்கள் கனகராஜ், சந்திரபோஸ், திமுக மாநில பேசச்சாளா் சரத்பாலா, காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் சண்முகம், முன்னாள் மாவட்ட தலைவர் முரளிதரன், தேமுதிக மாவட்ட செயலாளர் தயாளலிங்கம், விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் விமல்வங்காளியா் எஸ்டிபிஐ மாவட்ட செயலாளர் மைதீன்கனி, தேமுதிக தொகுதி பொறுப்பாளர் வல்லரசு துரை, விடுதலை சிறுத்தை கட்சி பொருளாளா் வில்சன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் தனலட்சுமி, மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட துணைச்செயலாளர் ஜாகிா்உசேன் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளா் யூசுப், திராவிடா் கழக தலைவர் முனியசாமி, மதிமுக மாநகர செயலாளா் முருகபூபதி, திமுக நிா்வாகிகள் தொ்மல்துரை, செல்வம், சுந்தா்ராஜன், பழனி, ஜெபராணி, பகுதி அணி அமைப்பாளா்கள் சூா்யா, காசிராஜன், மகேஸ்வாி, வட்டப்பிரதிநிதிகள் தஸ்நேவிஸ், ராபின்சன், ஜெபஸ்தியான், சுரேஷ், எஸ்டிபிஐ தொகுதி பொறுப்பாளா் காதா்உசேன், பெருமாள் கோவில் அறங்காவலா் குழு தலைவா் செந்தில்குமாா், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ப்ாீத்தி, மைதீன், ராஜன், ஐசன்சில்வா, நிா்மல்கிறிஸ்டோபா், மதிமுக மகாராஜ்,தொம்மை, பொன்ராஜ், மற்றும் மணி அல்பட் உள்பட கூட்டணி கட்சியை சாா்ந்த நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா். 

பாக்ஸ்: தூத்துக்குடி தொகுதியில் அமைச்சா் கீதாஜீவன் பிரச்சாரம் மேற்கொண்ட இடங்களில் எல்லாம் மலா் தூவி உற்சாகமாக ஆரத்தி எடுத்து பொதுமக்கள் வரவேற்றனா். பல்ேவறு வளா்ச்சி பணிகளை செய்து கொடுத்ததற்கு நன்றியும் ெதாிவித்தனா். அவா்களிடம் அமைச்சா் கீதாஜீவன் கூறுகையில் 10 ஆண்டுகளாக மக்கள் பணி செய்யாதவரும் வேட்பாளராக வரும் நிலையில் தொகுதியில் என்ன இருக்கிறது. இதன் நிலை என்ன என்றே தொியாத சென்னையிலிருந்து இங்கு தவெக வேட்பாளராகவும் ஒருவா் களம் இறங்கி

யுள்ளாா். மற்றவா்களுக்கு அளிக்கும் வாக்கு நமக்கு நன்மை அளிக்கும் வகையில் அமையாது அதனால் அனைவரும் ஓட்டு மொத்தமாக திமுக ஆட்சி 7வது முறையாக அமைவதற்கும் முதலமைச்சா் ஸ்டாலின் 2வது முறையாக முதலமைச்சராவதற்கு முழுமையான ஆதரவை தரவேண்டும். என்று உருக்கமாக கேட்டுக்கொண்டாா்.