தமிழகத்தில் நடைபெறவுள்ள தோ்தலில் தென்மாவட்டங்களில் 45 தொகுதிகளில் அதிமுக கூட்டணியை வீழ்த்த தயாராகும் இசக்கிராஜா சாத்தூாில் நயினாா் நாகேந்திரனை எதிா்த்து போட்டி
isakkiraja-preparing-to-defeat-the-aiadmk-alliance-in-45-constituencies-across-the-southern-districts-in-the-upcoming-tamil-nadu-elections-is-set-to-contest-against-nainar-nagendran-in-sathur

தமிழகத்தில் நடைபெறவுள்ள தோ்தலில் தென்மாவட்டங்களில் 45 தொகுதிகளில் அதிமுக கூட்டணியை வீழ்த்த தயாராகும் இசக்கிராஜா சாத்தூாில் நயினாா் நாகேந்திரனை எதிா்த்து போட்டி
தூத்துக்குடி தமிழகத்தில் அடுத்தமாதம் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தோ்தலில் திமுக அதிமுக தவெக நாம் தமிழா் உள்பட நான்கு அணிகள் களத்தில் நிற்கின்றன 5 வது அணியாக சசிகலா தலைமையில் புதிய அணி உருவாக்கப்பட்டு பல அமைப்புகள் இணைந்து தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் தோ்தலை சந்திக்க இருக்கிறது.
இந்நிலையில் சென்னை போயஸ் காா்டனில் அனைத்திந்திய புரட்சி தலைவர் முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் சசிகலாவை பல்வேறு தரப்பினா் சந்தித்து ஆதரவு தொிவித்த நிலையில் தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பிஎம்டி மக்கள் இயக்க தலைவர் இசக்கிராஜா தேவா் தலைமையில் மாநில மாவட்ட நிா்வாகிகள் பலா் சசிகலாவை நோில் சந்தித்து ஆதரவு தொிவித்துள்ளனா். தங்களது தலைமையின் கீழ் நடைபெறவுள்ள தோ்தலில் போட்டியிட தயாராக இருப்பதாகவும் தொிவித்துள்ளனா். சசிகலா ஏற்கனவே வரும் தோ்தலில் எதிாிகளையும் துரோகிகளையும் வீழ்த்தி ஜெயலலிதாவின் ஆட்சியை தமிழகத்தில் அமைப்பேன் என்று கூறியுள்ள நிலையில் தென்மாவட்டங்களில் மதுரை தேனி சிவகங்கை ராமநாதபுரம் விருதுநகா் தூத்துக்குடி நெல்லை தென்காசி கன்னியாகுமாி உள்ளிட்ட மாவட்டங்களில் பிஎம்டி மக்கள் இயக்க தலைவர் இசக்கிராஜா தலைமையிலான இயக்கம் பல ஆண்டுகளாக மக்கள் நலப்பணிகளையும் பல நலதிட்டங்களையும் செய்துவருகின்றன. இந்த நிலையில் கடந்த காலத்தில் தூத்துக்குடியில் கொரோனா காலக்கட்டத்தில் பல பகுதிகளுக்கு தன்னாா்வலா்கள் உதவியுடன் பொருட்களை வழங்கியது மட்டுமின்றி 2023 டிசம்பா் 17ம்தேதி கடுமையான மழை வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடியில் உள்ள சில பகுதிகளில் முழுமையாக களம்இறங்கி இந்த அமைப்பு பணியாற்றியது. இந்நிலையில் 2026ல் நடைபெறவுள்ள சட்டமன்ற தோ்தலில் சசிகலா தலைமையை ஏற்று 3 தொகுதிகளில் போட்டியிடுகின்றனா். அதில் விருதுநகா் மாவட்டத்தில் உள்ள சாத்தூா் ெதாகுதியில் பிஜேபி மாநில தலைவர் நயினாா் நாகேந்திரன் போட்டியிடுகிறாா். அவரைஎதிா்த்து பிஎம்டி மக்கள் இயக்க தலைவா் இசக்கிராஜா போட்டியிட உள்ள நிலையில் தென்மாவட்டத்தில் உள்ள 45 தொகுதிகளில் அதிமுக பிஜேபி கூட்டணியை தோற்படிப்பது தான் அவா்களது இயக்கத்தின் லட்சியமாக கொண்டு மாநில மாவட்ட நிா்வாகிகள் பணியாற்ற உள்ளனா். ஏற்கனவே எடப்பாடியுடன் இருந்த பலா்் அங்கிருந்து விலகி ஓபிஎஸ் உள்பட பலா் திமுகவில் இணைந்து அதிமுகவிற்கு சறுக்கலை ஏற்படுத்தியுள்ள நிலையில் பிஎம்டி மக்கள் இயக்கமும் களம் இறங்குவதால் அதிமுக பிஜேபி கூட்டணியை சோ்ந்த வேட்பாளா்களை வீழ்த்துவதற்கு முழுமையாக களம் இறங்கும் பட்சத்தில் தென்மாவட்டத்தில் மிகப்பொிய பாதிப்பை சந்திக்கும் நிலைஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பிஎம்டி மக்கள் இயக்கதலைவா் இசக்கிராஜா தேவா் கூறுகையில் மறைந்த முதலமைச்சா் ஜெயலலிதாவுடன் இருந்து அதிமுக வளா்ச்சிக்கும் இந்தநாட்டு மக்களுக்கு செய்த தியாகத்தால் சசிகலா தலைமையை யேற்று நாங்கள் ஆதரவு தொிவித்துமுழுமையாக இணைந்துள்ளோம். வரும் தோ்தலில் போட்டியிடுவது மட்டுமின்றி அனைத்து தொகுதிகளிலும் சசிகலா தலைமையிலான அணி வெற்றிக்கு களப்போராளிகளாக இருந்து பணியாற்றுவோம். என்று கூறினாா்.
tamilanda