ஒட்டப்பிடாரம் தொகுதியில் எளிதான வெற்றி வாய்ப்பை இழந்த தவெக..

TVK loses an easy victory opportunity in the Ottapidaram constituency.

ஒட்டப்பிடாரம் தொகுதியில் எளிதான வெற்றி வாய்ப்பை இழந்த தவெக..

ஒட்டப்பிடாரம் தொகுதியில் எளிதான வெற்றி வாய்ப்பை இழந்த தவெக..

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிகள் திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏ சண்முகையா தவெக சார்பில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேட்பாளர் மதன்ராஜ் அவர்களை பகடைக்காயாக வைத்து திமுக வேட்பாளர் மற்றும் திமுக மாவட்டச் செயலாளர் ஆகியோர் சண்முகையா மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றியை தடுத்துள்ளனர்.

சண்முகையா தவெகவில் போட்டியிட்டால் கண்டிப்பாக வெற்றி பெறுவார் என்ற சூழலில் சண்முகையாவை வெற்றி பெற வைக்க கூடாது என்ற ஒரே காரணத்திற்காக மதன்ராஜிற்கு அதிகப்படியான தொகை திமுக வேட்பாளரிடமிருந்து கை மாறி உள்ளது.

தவெக தலைமையிடமிருந்து மதன்ராஜ் இடம் கேட்ட பொழுது முன்னதாகவே திமுக மாவட்ட செயலாளர் இடம் இருந்து வந்த அறிவுறுத்தலின்படி தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டியதாகவும் தகவல்கள் பரவி வருகிறது.

மதன்ராஜ் நின்றால் கண்டிப்பாக வெற்றி பெற முடியாது என்பது அனைவரும் அறிந்ததே.ஆனால் சிட்டிங் சண்முகையா போட்டியிட்டால் கண்டிப்பாக ஒட்டப்பிடாரம் தொகுதி தவெக வசமாகும் என்பது தவெக நிர்வாகிகளின் ஒருமித்த கருத்தாக பரவி வருகிறது..