தூத்துக்குடி : வடக்கு மண்டலம் வார்டு 12-ல் டெங்கு ஒழிப்பு பணி தீவிரம் - 2 கடைகளுக்கு ரூ.2000 அபராதம்!

தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு எண் 12, ஸ்டேட் பேங்க் காலனி மற்றும் எட்டையாபுரம் பிரதான சாலை பகுதிகளில் மாநகராட்சி சுகாதாரத்துறை சார்பில் இன்று டெங்கு ஒழிப்பு சிறப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இப்பகுதியில் செயல்பட்டு வரும் பழைய பொருட்கள் சேகரிக்கும் கடைகளில் ஆய்வு செய்த போது, கடை வளாகத்தில் தேங்கியிருந்த தண்ணீர் மற்றும் பொருட்களில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் ஆதாரங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து விதிமுறைகளை மீறிய இரண்டு கடைகளுக்கு தலா ரூ.1000 வீதம் மொத்தம் ரூ.2000 அபராதம் விதிக்கப்பட்டது.

*பொதுமக்களுக்கு வேண்டுகோள்:* தங்களது வீடுகள் மற்றும் கடைகளை சுற்றி குப்பைகள் சேராமலும், மழைநீர் மற்றும் கழிவுநீர் தேங்காமலும் பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும், மாநகராட்சி மேற்கொண்டு வரும் டெங்கு தடுப்பு பணிகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.