2031-ல் தூத்துக்குடியை லஞ்சம் இல்லாத மாவட்டமாக மாற்ற இலக்கு - சீட்டா அமைப்பின் சிறப்பு திட்ட பகுதி ஒருங்கிணைப்பாளர்களுக்கு முதல்கட்ட பயிற்சி!
2031-ல் தூத்துக்குடியை லஞ்சம் இல்லாத மாவட்டமாக மாற்ற இலக்கு - சீட்டா அமைப்பின் சிறப்பு திட்ட பகுதி ஒருங்கிணைப்பாளர்களுக்கு முதல்கட்ட பயிற்சி!
*தூத்துக்குடி:*
2031-ம் ஆண்டுக்குள் தூத்துக்குடி மாவட்டத்தை லஞ்சம் இல்லாத மாவட்டமாக மாற்றும் இலக்குடன், சீட்டா (SEETA) அமைப்பின் சிறப்பு திட்டமான *சிப்பு (SIPP) திட்டம் - அகில இந்திய மக்கள் பாராளுமன்றம்* சார்பாக முக்கிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்க்க, மாவட்டம் முழுவதும் பகுதி ஒருங்கிணைப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்வு செய்யப்பட்ட பகுதி ஒருங்கிணைப்பாளர்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டு, அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான *முதல்கட்ட பயிற்சி முகாம்* நடைபெற்றது.
இந்த பயிற்சி முகாமை *சீட்டா அமைப்பின் நிறுவனரும், அகில இந்திய லஞ்ச ஒழிப்பு மையம் மற்றும் அகில இந்திய மக்கள் பாராளுமன்றத்தின் சேர்மேனுமான லஞ்ச ஒழிப்பு ப.பாபு* அவர்கள் துவக்கி வைத்தார்.
இதில், லஞ்சத்தை எவ்வாறு ஆதாரத்துடன் புகார் செய்வது, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது, சட்ட ரீதியான வழிமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
tamilanda