தூத்துக்குடியில் உதயநிதி ஃப்ரெஷ் ஜூஸ் கார்னர்” கடைக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 3வது முறையாக வருகை புரிந்து – எளியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தையல் இயந்திரம் வழங்கினார். தூத்துக்குடியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் – ஏழை மக்களுக்கு தையல் இயந்திரம் வழங்கல்

deputy-chief-minister-udhayanidhi-stalin-visited-the-udhayanidhi-fresh-juice-corner-shop-in-thoothukudi-for-the-3rd-time-–-donated-sewing-machines-to-the-poor-and-differently-abled-deputy-chief-minister-udhayanidhi-stalin-in-thoothukudi-–-donated-sewing-machines-to-the-poor

தூத்துக்குடியில் உதயநிதி ஃப்ரெஷ் ஜூஸ் கார்னர்” கடைக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 3வது முறையாக வருகை புரிந்து – எளியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தையல் இயந்திரம் வழங்கினார். தூத்துக்குடியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் – ஏழை மக்களுக்கு தையல் இயந்திரம் வழங்கல்
Deputy Chief Minister Udhayanidhi Stalin visited the “Udhayanidhi Fresh Juice Corner” shop in Thoothukudi for the third time and donated sewing machines to the poor and the differently-abled.
தூத்துக்குடியில் உதயநிதி ஃப்ரெஷ் ஜூஸ் கார்னர்” கடைக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 3வது முறையாக வருகை புரிந்து – எளியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தையல் இயந்திரம் வழங்கினார். தூத்துக்குடியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் – ஏழை மக்களுக்கு தையல் இயந்திரம் வழங்கல்

தூத்துக்குடியில் உதயநிதி ஃப்ரெஷ் ஜூஸ் கார்னர்” கடைக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 3வது முறையாக வருகை புரிந்து – எளியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தையல் இயந்திரம் வழங்கினார். தூத்துக்குடியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் – ஏழை மக்களுக்கு தையல் இயந்திரம் வழங்கல்

தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடிக்கு வருகை தந்து பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினார். அதன்போது தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் “உதயநிதி ஃப்ரெஷ் ஜூஸ் கார்னர்” கடைக்கு வருகை புரிந்தார்.

இந்த கடையின் உரிமையாளர் ஜே.கே. ஜஸ்டின், தனது உழைப்பில் இருந்து சேமித்து வைத்த பணத்தை பயன்படுத்தி, ஏழை எளிய மக்களின் வேண்டுகோளை ஏற்று 7 தையல் மிஷின்களை வாங்கி வழங்கும் திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார்.

அந்த தையல் இயந்திரங்களை தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது கையால் இன்று ஏழை மற்றும் எளிய மக்களுக்கு வழங்கினார்.

ஒரு காலத்தில் வறுமையிலும் தன்னம்பிக்கை இழந்த நிலையிலும் இருந்த ஜஸ்டினுக்கு, உதயநிதி ஸ்டாலின், உதவி செய்து வாழ்வாதாரமாக இந்த கடையை அமைக்க உதவினார். மாநில இளைஞரணி துணை செயலாளர் ஜோயல், முயற்சியும் ஏற்பாட்டிலும் இந்த கடை உருவாக்கப்பட்டு ஜஸ்டினுக்கு வழங்கப்பட்டது.

அந்த கடையின் வருமானத்திலிருந்து இன்று ஜஸ்டின் அவர்கள் சமூகப் பொறுப்புடன் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியில்

 சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சரும் வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான பி கீதா ஜீவன் மீன் வளம் மீனவர் நலன் அமைச்சரும் திமுக தெற்கு மாவட்ட கழகச் செயலாளருமான அனிதா ராதாகிருஷ்ணன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் எஸ் ஜோயல், ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையா விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மூன்று முறை ஜேகே ஜஸ்டின் கடைக்கு வருகை புரிந்து நலத்திட்டங்களை வழங்கியது சிறப்புமிக்கது. ஜே கே ஜஸ்டின், மாற்றுத்திறனாளிகளுக்கும் மூன்று சக்கர சைக்கிள் வழங்கியிருக்கிறார். தையல் இயந்திரங்களும் மூன்றாவது முறையாக வழங்கியிருக்கிறார். தமிழக துணை முதல்வர் வருகை புரிந்தது இது மூன்றாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.