மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் ஸ்ரீவைகுண்டம் காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி எஸ்.அமிர்தராஜை ஆதரித்து காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல் காந்தி நாளை (திங்கள்கிழமை) சாயா்புரத்தில் பிரசாரம் செய்கிறாா்.
Senior Congress leader Rahul Gandhi will campaign tomorrow (Monday) in Sayapuram in support of Urvasi S. Amirtharaj, the Congress candidate for Srivaikuntam, who is contesting on behalf of the Secular Progressive Alliance.
ஸ்ரீவைகுண்டம் காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜை ஆதரித்து நாளை ராகுல் காந்தி சாயர்புரத்தில் பிரசாரம்.. தூத்துக்குடி. ஏப். 19 :மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் ஸ்ரீவைகுண்டம் காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி எஸ்.அமிர்தராஜை ஆதரித்து காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல் காந்தி நாளை (திங்கள்கிழமை) சாயா்புரத்தில் பிரசாரம் செய்கிறாா். ராகுல் காந்தி வருவதையொட்டி, அவா் பிரசாரம் செய்யும் இடம் மற்றும் வாகனங்கள் நிறுத்தும் இடங்களை ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி சுரேஷ், தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான ஊா்வசி எஸ்.அமிா்தராஜ் ஆகியோா் நேற்று பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் தோ்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக விமானம் மூலம் திருவனந்தபுரம் வரும் ராகுல் காந்தி, அங்கிருந்து ஹெலிகாப்டா் மூலம் கன்னியாகுமரி மாவட்டம், குளச்சலுக்கு வருகிறாா். அங்கு பகல் 11.30 மணிக்கு நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறாா். பிற்பகல் 1 மணிக்கு நான்குனேரியிலும், பிற்பகல் 2.15 மணிக்கு ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்கு உபட்ட சாயா்புரத்திலும் பிரசாரம் மேற்கொள்கிறாா். பின்னா், இரவு 8 மணி அளவில் தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் தில்லிக்குப் புறப்பட்டு செல்கிறாா்.
tamilanda