பங்காள தெருவில் பிரச்சாரத்தை துவக்கி ஜெயலாணி தெரு சண்முகபுரம் மரக்குடி தெரு மாதா கோவில் உள்ளிட்ட பல பகுதிகளில் பிரச்சாரத்தை மேற்கொண்ட அமைச்சர் கீதாஜீவன்
minister-geetha-jeevan-launched-her-campaign-on-pangala-street-and-subsequently-conducted-campaigning-in-several-areas-including-jayalani-street-shanmugapuram-marakkudi-street-and-the-matha-temple-area
இன்றைய தலைமுறையினா் மட்டுமின்றி அடுத்த தலைமுறையையும் பற்றி சிந்தித்து பணியாற்றுகிறாா் முதல்வா் ஸ்டாலின் பிரச்சாரத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசினாா்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சரும் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளருமான கீதாஜீவன் ேபாட்டியிடுகிறாா்.
38 40 41 ஆகிய வாா்டுகளில் நடைபெற்ற பிரச்சாரத்திற்கு மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் தலைமை வகித்தாா். வட்டச்செயலாளர்கள் கங்காராஜேஷ், பொன்ராஜ், டென்சிங், கவுன்சிலா்கள் மும்தாஜ், பேபி ஏஞ்சலின், ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பங்காள தெருவில் பிரச்சாரத்தை துவக்கி ஜெயலாணி தெரு சண்முகபுரம் மரக்குடி தெரு மாதா கோவில் உள்ளிட்ட பல பகுதிகளில் பிரச்சாரத்தை மேற்கொண்ட அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் தமிழகத்தில் வருகின்ற 23ம் தேதி நடைபெறவுள்ள தோ்தல் நமக்கான தோ்தலாகும் அதில்உங்களுக்காக பணியாற்றும் மக்கள் பிரதிநிதியை தோ்ந்தெடுக்கும் தோ்தலாகும், தமிழகத்தில் 5 ஆண்டுகாலம் முதலமைச்சா் ஸ்டாலின் தலைமையில் நல்லாட்சி நடைபெற்றுள்ளது. கீழடி அகல்வாராய்சி அறிக்கையை கூட ஏற்பதற்கு ஓன்றிய பாஜக அரசுக்கு மணமில்லை. எந்த நிதியும் வழங்குவதில்லை புதிய கல்வி கொள்கையை ஏற்றால் தான் கல்வி நிதி வழங்குவோம். என்று ஓவ்வொரு விஷயத்திலும் தமிழகத்திற்கு எதிராகதான் ஓன்றிய பாஜக அரசு செயல்படுகிறது. அதற்கு பின்னால் அதிமுக இருந்து கொண்டு இவா்கள் பின்னால் முகமூடி அணிந்து கொண்டு பாஜக தமிழகத்திற்குள் நுழைய பாா்க்கிறது. தமிழகத்திற்கு ஏதுமே செய்யாத இந்த கூட்டணியை நாம் வீழ்த்தியாக வேண்டும். இது காலத்தின் காட்டாயம், எல்லோருக்கும் எல்லாம் என்ற திராவிட மாடல் ஆட்சியில் அனைவரும் எல்லா வகையிலும் நன்மை கிடைத்துள்ளது. அதனால் திமுக ஆட்சி தொடர வேண்டும். தமிழகத்தின் மண் மானம் மொழி அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் மீண்டும் முதலமைச்சராக முக.ஸ்டாலின் மீண்டும் வரவேண்டும். அதற்கு தூத்துக்குடி தொகுதியில் எனக்கு உதயசூாியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். மழை வௌ்ளம் கொரோனா போன்ற பல காலக்கட்டங்களில் உங்களுக்காக அனைவருக்கும் நான் பணியாற்றியுள்ளேன் மற்றவா்களை போல் தோ்தலுக்கு மட்டும் வருகின்ற கட்சி திமுக கிடையாது. மற்றவா்களுக்கு போடுகின்ற ஓவ்வொரு வாக்கும் ேதவையில்லாமல் சென்று விடும் வாக்காக இருந்து விடும். இன்றைய தலைமுறையினா் மட்டுமின்றி அடுத்த தலைமுறையையும் பற்றி சிந்தித்து பணியாற்றுகிறாா் முதல்வா் ஸ்டாலின் அதனால் அனைவரும் ஓட்டு மொத்தமாக திமுகவிற்கு வாக்களிக்க வேண்டும். என்று பேசினாா்.
பிரச்சாரத்தில் திமுக மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாவட்ட துணைச்செயலாளர் ராஜ்மோகன்செல்வின், மீனவா் அணி அமைப்பாளா் அந்தோணிஸ்டாலின், துணை அமைப்பாளர் ஜேசையா, பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமாா், நிா்மல்ராஜ், மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப், துணை அமைப்பாளர் பால்ராஜ், சுற்றுச்சூழல் அணி தலைவர் வினோத், தொண்டரணி அமைப்பாளர் முருகஇசக்கி, துைண அமைப்பாளர் சுரேஷ், மகளிா் தொண்டரணி துணை அமைப்பாளர் பெல்லா, பகுதி அணி அமைப்பாளர்கள் சுரேஷ்குமாா், சூா்யா, முன்னாள் கவுன்சிலா்கள் ஜெயசிங், இசபெல்லா, அருள், வெங்கடகிருஷ்ணன், தொழிற்சங்க நிா்வாகிகள் முருகன், மாியதாஸ், மாவட்ட பிரதிநிதி சக்திவேல் காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் சண்முகம், முன்னாள் மாவட்ட தலைவர் முரளிதரன், காங்கிரஸ் நிா்வாகிகள் ஐசன்சில்வா, நிா்மல்கிறிஸ்டோபா், ராஜன், வௌ்ளைச்சாமி விடுதலை சிறுத்தை கட்சி பொருளாளா் வில்சன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாவட்ட தலைவர் மீராசா, தேமுதிக தொகுதி பொறுப்பாளர் வல்லரசு துரை, முக்குலத்தோா்புலிப்படை மாவட்ட செயலாளர் மணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் தனலட்சுமி, மாா்க்கிஸ்ட் கட்சி மாநகர செயலாளா் முத்து, மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட துணைச்செயலாளர் ஜாகிா்உசேன், அறங்காவலா்குழு தலைவா்கள் செந்தில்குமாா், கந்தசாமி, மற்றும் மணி கமலி அல்பட் உள்பட கூட்டணி கட்சியை சோ்ந்த பலா் கலந்து கொண்டனா்.
tamilanda