தூத்துக்குடி வட்டக்கோவில் அருகில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு, பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.

near-vattakovil-in-thoothukudi-kanimozhi-mp—the-dmk-deputy-general-secretary-and-leader-of-the-dmk-parliamentary-party—conducted-an-election-campaign-and-solicited-votes-from-the-public-for-the-rising-sun-symbol

தூத்துக்குடி வட்டக்கோவில் அருகில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு, பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.

நாடாளுமன்ற தொகுதிகளை அதிகரிப்பதாக சொல்லி, தமிழ்நாட்டை வஞ்சிக்க துடிக்கின்றனர்! இந்தி எதிர்ப்பு போராட்டங்களை எல்லாம் தாண்டி வந்த தமிழ்நாடு, மறுபடியும் அந்த நிலைக்கு எங்களை தள்ளாதீர்கள் தூத்துக்குடியில் கீதாஜீவனை ஆதாித்து கனிமொழி எம்.பி பேச்சு

     தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், வேட்பாளருமான கீதாஜீவனை ஆதரித்து, தூத்துக்குடி வட்டக்கோவில் அருகில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு, பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். முன்னதாக, முன்னாள் முதலமைச்சர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

     பிரச்சாரத்தில் கனிமொழி எம்.பி பேசுகையில் வேட்பாளர் கீதாஜீவன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பாரம்பரியத்தில் வந்தவர். அவருடைய தந்தை, நம் அன்பிற்கும் மரியாதைக்கும் போற்றுதலுக்கும் உரியவா் பெரியசாமி, கலைஞரின் உறுதியான பக்தர் மட்டுமல்ல இங்கு உள்ள அனைத்து மக்களின் அன்பையும் பெற்றவர். அப்படிப்பட்ட ஒருவரின் மகளாக அரசியலில் காலடி எடுத்து வைத்து, இன்று தனக்கான ஒரு இடத்தை உருவாக்கிக் கொண்டிருப்பவர்தான் நம்முடைய அமைச்சர் கீதாஜீவன். நான் கீதாஜீவனுடன் ஒவ்வொரு பகுதிக்கும் செல்லும் போது, எனக்கு ஒவ்வொரு முறையும் ஆச்சரியமாக இருக்கும். அந்தத் தெருவில் யார் யார் இருக்கிறார்கள், அந்த வீட்டில் யார் யார் இருக்கிறார்கள், அந்தக் குடும்பத்தில் என்ன செய்கிறார்கள் என்பதெல்லாம் தெரிந்து வைத்திருப்பவர். தன் தொகுதியில் உள்ள அனைவரையும் பெயர் சொல்லி அழைத்து அறிந்து வைத்திருக்கும் உண்மையான மக்கள் பிரதிநிதிதான் அவர். அவர்களுடன் நாம் பயணம் செய்யும்போது, ஓயாமல் அவர்களுக்கு தொலைபேசி அழைப்புகள் வந்துகொண்டே இருக்கும். யார் அழைக்கிறார்கள் என்பதைப் பார்த்து தேர்வு செய்ய மாட்டார்கள்; யார் அழைத்தாலும் அந்த அழைப்பை எடுத்துப் பேசுவார்கள். அவர்களுக்கு பதில் அளித்து, அந்தப் பிரச்சினையை தீர்த்து வைக்கும் தன்மை கொண்டவர், அமைச்சர் பொறுப்பில் இருந்தாலும் அதையே தொடர்ந்து செய்யக்கூடியவர்தான். நம்முடைய முதலமைச்சர் ஆட்சிக்கு வந்த பிறகுதான், மழைநீர் தேங்காமல் ஓடக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கு முன்பு, ஒவ்வொரு மழையிலும் நாங்கள் இருவரும் அங்கே நின்று, எவ்வளவு தண்ணீரில் நடந்து சென்று மக்களைச் சந்தித்திருக்கிறோம் என்பதை உங்களில் அனைவரும் நன்றாக அறிவீர்கள். அப்படி மக்களுக்காக பணி செய்யக்கூடிய ஒருவர், நீங்கள் அழைக்கும் குரலுக்கு ஓடோடி வந்து உங்கள் பிரச்சினைகளை தீர்த்து வைத்திருக்கும் நபர், உங்களுக்காகப் போராடக்கூடிய ஒருவரைத்தான்—நம்முடைய முதலமைச்சர் ஸ்டாலின் மீண்டும் உங்களுடைய வேட்பாளராக இங்கே நிறுத்தியுள்ளார். நிச்சயமாக, நம்முடைய கீதாஜீவனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து அவர்களை வெற்றி பெறச் செய்வீர்கள் என நம்புகிறேன். இந்த முறை அவருக்கு மிகப் பெரிய வெற்றியை நீங்கள் பெற்றுத் தர வேண்டும் முதலமைச்சர் ஸ்டாலின் மக்களுக்காக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் மாநில உரிமைகள் குறித்த ஒரு முக்கியமான செய்தியை குறிப்பிட்டுள்ளார். திடீரென நீங்கள் அனைவரும் செய்தித்தாள்களில் படித்திருப்பீர்கள்ஒன்றிய அரசு, பாஜக, தேர்தல் நேரத்தில் நாடாளுமன்ற கூட்டத் தொடர் முடிந்த பிறகு திடீரென ஒரு கூட்டத்தை அறிவித்து அழைத்துள்ளது. மூன்று நாட்கள் நடைபெறும் அந்தக் கூட்டத் தொடரில், பெண்கள் இடஒதுக்கீட்டிற்கான மசோதா, தொகுதி மறுசீரமைப்பு போன்றவை கொண்டு வரப்படும் என்று அறிவித்துள்ளனர். எதிர்க்கட்சிகள் அனைத்தும் அவர்களிடம் மீண்டும் மீண்டும் தெரிவித்துள்ளோம். தேர்தல் நேரத்தில் அவற்றை கொண்டு வர வேண்டாம் என்று. தேர்தல் முடிந்த பின், இரண்டு வாரங்கள் கழித்து அந்தக் கூட்டத் தொடரை நடத்தலாம் என்றும் கூறியுள்ளோம். அவர்கள் கொண்டு வரக்கூடிய முடிவுகளை அறிவித்து விட்டு சென்று விடுகிறார்கள். எங்களைச் சேர்த்து ஆலோசனை செய்வதோ, எதிர்க்கட்சிகளின் கருத்துகளை கேட்பதோ கிடையாது அப்படிப்பட்ட ஏகாதிபத்திய போக்கு நடைபெற்று வருகிறது. நாடாளுமன்றக் கூட்டத் தொடரை நடத்துவோம் என்று அறிவித்துள்ளனர். அதைத் தாண்டி, பெண்களுக்கான இடஒதுக்கீட்டை கொண்டு வருவோம் என்றும் கூறுகின்றனர். ஆனால், ஆரம்பத்திலேயே அதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டுவிட்டது. அப்போது அவர்கள் என்ன சொன்னார்கள்? “மக்கள்தொகை கணக்கெடுப்பு முடித்து, தொகுதி மறுசீரமைப்பை செய்து முடித்த பின்பே மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்துவோம்” என்றார்கள்.நாம் அப்போதே கூறினோம், இப்போது உள்ள தொகுதி எண்ணிக்கையிலேயே பெண்கள் இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும் அதை உடனே அமல்படுத்த வேண்டும் என்று. இதைத் தொடர்ந்து, நாம் திரும்பத் திரும்ப வலியுறுத்திக் கொண்டிருக்கிறோம். ஆனால், அதிமுக பாஜகவுடன் இணைந்து, “நீங்கள் எப்போது வேண்டுமானாலும் கொண்டு வாருங்கள் என்று கூறியுள்ளனர்.

இப்போது திடீரென ஞானோதயம் ஏற்பட்டுள்ளது. மக்கள்தொகை கணக்கெடுப்பு இன்னும் நடத்தப்படவில்லை. ஆனால், நாடாளுமன்றத்தில் உள்ள இருக்கைகள் எண்ணிக்கையை 50 சதவீதம் அதிகரிக்கப் போவதாக கூறுகின்றனர். இப்போது உள்ள எம்.பி.க்களின் எண்ணிக்கை 543. அதில் மூன்றில் ஒரு பகுதி என்றால் 181. அந்த 181 இடங்களை மகளிருக்கு வழங்க வேண்டும் என்பதுதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கருத்து. ஆனால், “முதலில் 50 சதவீதம் அதிகரித்து, அதன் பிறகு வழங்குவோம்” என்று கூறி, தமிழ்நாட்டிற்கு தொடர்பான மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. 16ம் தேதி நாடாளுமன்றக் கூட்டம் நடைபெற உள்ளது. அந்த மசோதாவில் என்ன கூறுகின்றனர் என்றால் ஒரு குழுவை அமைத்து, எந்த மாநிலத்திற்கு எத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்பதைக் குறித்த முடிவை அந்தக் குழுவே எடுக்கும் என்கிறார்கள். மக்கள் தொகையை கட்டுப்படுத்திய, அதாவது நல்லாட்சி நடத்திய தமிழ்நாடு போன்ற மாநிலங்களே இதனால் பாதிக்கப்படும். அப்படி பாதிப்பு ஏற்பட்டால், எங்களுக்கு தேர்தலைப் பற்றிய அக்கறை இல்லை தமிழ்நாட்டின் உரிமையே முக்கியம். நாங்கள் இந்தத் தேர்தலையெல்லாம் விட்டு விட்டு வந்து தெருவில் உட்கார்ந்து போராடுவோம் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளனர். ஏனெனில், இது நம்முடைய உரிமைகள் பற்றியது. அங்கு டெல்லியில் உள்ள நாடாளுமன்றத்தில் நமக்கு எண்ணிக்கை குறைந்தால், நம்முடைய கருத்துகளுக்கு மதிப்பு இருக்காது. எந்த மசோதாவையும் கொண்டு வந்து எளிதாக நிறைவேற்றிவிட முடியும். தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு அங்கு மதிப்பு இருக்காது நம்முடைய உரிமைகளை கேட்கவும் மாட்டார்கள். ஆனால், எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு இதைப் பற்றிய எந்தக் கவலையும் இல்லை. அவர் என்ன கூறுகிறார் என்றால் “மகளிருக்கான மசோதாவை கொண்டு வருவதில் திமுகக்கு உடன்பாடு இல்லை” என்று. அதையும் தாண்டி, சிலர் இதுபோன்ற கருத்துகளை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். அண்ணாமலை கூறுகிறார்: “கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் போன்றவர்கள் தான் அங்கே இருக்கிறார்கள். மற்றவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் நாங்கள் மகளிருக்கான இடஒதுக்கீட்டை கொண்டு வருகிறோம்” என்று. இந்த 543 இடங்களில் 181 இடங்களை பெண்களுக்கு வழங்குவதில் யாருக்கும் மனம் வரவில்லையா? நாங்கள் இதைத் தொடர்ந்து திரும்பத் திரும்ப வலியுறுத்திக் கூறி வருகிறோம். இருக்கக்கூடிய இடங்களிலேயே பெண்களுக்கான இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்பது தான், கலைஞர் தொடங்கி நம்முடைய முதலமைச்சர் ஸ்டாலின் வரை தொடர்ந்து வலியுறுத்தி வரும் கருத்தாகும். உங்களுக்கு அதை வழங்குவதில் மனமில்லை. “50 சதவீதம் அதிகரித்த பிறகே பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும்” என்று கூறுகிறீர்கள். ஏனெனில், உங்களின் எண்ணிக்கை குறைந்து விடும் என்ற பயம். அந்த நாடாளுமன்றத்தில் உள்ளவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதாகக் கூறி, தமிழ்நாட்டை வஞ்சிக்கத் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். “ஒரு குழுவை அமைப்போம்; அதன் பிறகு முடிவு செய்வோம்” என்று கூறினால், தமிழ்நாட்டிற்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால், நாங்கள் தொடர்ந்து போராடுவோம். தமிழ்நாடு தனித்துவமாக எழுந்து நிற்கும் மாநிலமாக மாறும் என்று நம்முடைய முதலமைச்சர் அவர்களுக்குத் தெரிவித்துள்ளார். இங்கே உள்ள அனைவரும் ஒரே குரலில் எழுந்து நின்று போராடுவோம் என்பதை ஒன்றிய அரசும், எடப்பாடி பழனிசாமியும், தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்ய நினைப்பவர்களும் புரிந்து கொள்ள வேண்டும். எங்களுடைய எண்ணிக்கை குறைக்கப்பட்டு, மற்றவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டால், நிச்சயமாக தமிழ்நாடு போராடும். தமிழ்நாட்டின் போராட்டம் ஓயாது. இந்தி எதிர்ப்பு போராட்டங்களை எல்லாம் தாண்டி வந்த தமிழ்நாடு, மறுபடியும் அந்த நிலைக்கு எங்களை தள்ளாதீர்கள் என்று தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டின் உரிமைகள், நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம், நம்முடன் கொள்கையிலே ஒத்துப்போகக்கூடிய கூட்டணி இயக்கங்கள் எல்லாம் இருக்கும்வரை, நிச்சயமாக தமிழ்நாட்டின் உரிமைகளை யாராலும் பறிக்க முடியாது என்பதை நான் இங்கே தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு துரோகம், வஞ்சனை செய்து கொண்டிருக்கும்வர்களுக்கு இந்தத் தேர்தலில், தமிழ்நாட்டு மக்கள் சரியான பாடத்தைப் புகட்டுவார்கள் என்று பேசினார். 

     பிரச்சாரத்தில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் சண்முகம், காங்கிரஸ் மாவட்ட தலைவர் சகாயராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் தனலட்சுமி, மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் முத்து விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் விமல்வங்காளியார், இந்திய யூனியன் முஸ்லீம்லீக் மாவட்ட தலைவர் மீராசா, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளா் யூசுப், மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட துணைச்செயலாளர் ஜாகிா்உசேன், மூக்குலத்தோர் புலிப்படை மாவட்ட செயலாளர் மணி, தேமுதிக தொகுதி பொறுப்பாளர் வல்லரசு துரை, எஸ்டிபிஐ மாவட்ட செயலாளர் மைதீன்கனி, திராவிடர் கழக தலைவர் முனியசாமி, சமத்துவ மக்கள் கழக மாவட்டச் செயலாளர் அற்புதராஜ், மக்கள் நீதிமய்யம் மாவட்டச் செயலாளர் ஜவஹர். மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாவட்ட துணைச்செயலாளர் ராஜ்மோன் செல்வின், மாநில பொறியாளர் அணி துணைச்செயலாளர் அன்பழகன், மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், மாநகர துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் வக்கீல் பாலகுருசுவாமி, நிர்மல்ராஜ், பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, கஸ்தூரிதங்கம், மாநில பேச்சாளர் சரத்பாலா, மாவட்ட அணி நிர்வாகிகள் அபிராமிநாதன், கவிதாதேவி, அந்தோணிஸ்டாலின், சீனிவாசன், குபேர்இளம்பரிதி, முத்துராமன் அருணாதேவி, பிரபு, நாகராஜன், அந்தோணி கண்ணன், நிக்கோலாஸ் மணி, பெனில்டஸ், கோகுல்நாத், அருண்குமார், ராமர், கணேஷ்குமாா், ஜான்சன், பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமார், ரவீந்திரன், ஜெயக்குமார், மேகநாதன், மாநகர அணி நிர்வாகிகள் ஜீவன் ஜேக்கப், அருண்சுந்தர், கிறிஸ்டோபர் விஜயராஜ், ரூபஸ்அமிர்தராஜ், ஆனந்தசேகர், ரூபராஜா, ரெக்ஸ், செல்வலட்சுமி, பால்ராஜ், மகேஸ்வரன்சிங், சத்யா, செந்தில்குமாா்,வினோத், சாகுல்ஹமீது, ரவி, செல்வின், வக்கீல் நாகராஜன்பாபு, மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், சேர்மபாண்டியன், சக்திவேல், நாராயணன், ராஜ்குமார், வட்டச்செயலாளர்கள் ரவீந்திரன், முனியசாமி, ராஜாமணி, சுரேஷ், செல்வராஜ், மந்திரகுமார், பொன்பெருமாள், டென்சிங், மனோ, பாலகுருசாமி, சுரேஷ், பாலு, அல்பட், ரவி இளங்கோ, சுரேஷ்மகாராஜா, செந்தில்குமார், பத்மாவதி, கதிரேசன், லியோ ஜான்சன், கவுன்சிலர்கள் சரவணக்குமார், விஜயகுமார், பொன்னப்பன், கண்ணன், வைதேகி, பவாணி, ரெக்ஸ்லின், ஜாக்குலின்ஜெயா, ஜெயசீலி, ராஜதுரை, ஜான்சிராணி, பட்சிராஜ், வழக்கறிஞர்கள் மோகன்தாஸ் சாமுவேல், சுபேந்திரன், ஆனந்தகபரியேல்ராஜ், மாலாதேவி, முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன், அறங்காவலர் குழு தலைவர்கள் செந்தில்குமார், கந்தசாமி, பகுதி அணி அமைப்பாளர்கள் காசிராஜன், குமார், சுரேஷ்குமார், சூா்யா, மதிமுக மாநக செயலாளர் முருகபூபதி, எஸ்டிபிஐ கட்சி தொகுதி பொறுப்பாளர் காதா்உசேன், மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த அக்பா், மைதீன், நிா்மல்கிறிஸ்டோபா் ஐசன்சில்வா கோபால், ராஜன், மணி அல்பட், பிரபாகர், பேச்சிமுத்து, பாஸ்கர், புஷ்பராஜ், உள்பட கூட்டணி கட்சியை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.