தூத்துக்குடி மாவட்டம், ஶ்ரீவைகுண்டம் அதிமுக வேட்பாளர் சண்முகநாதன் மற்றும் தூத்துக்குடி தொகுதி வேட்பாளர் சி.த செல்லபாண்டியன் ஆகியோர் இணைந்து பேட்டி.!
shanmuganathan-the-aiadmk-candidate-for-srivaikuntam-in-the-thoothukudi-district-and-ct-chellapandian-the-candidate-for-the-thoothukudi-constituency-gave-a-joint-interview
திமுக ஆட்சி மக்கள் விரோதம்… 2026ல் மாற்றம் உறுதி” – தூத்துக்குடி மாவட்டம், ஶ்ரீவைகுண்டம் அதிமுக வேட்பாளர் சண்முகநாதன் மற்றும் தூத்துக்குடி தொகுதி வேட்பாளர் சி.த செல்லபாண்டியன் ஆகியோர் இணைந்து பேட்டி.!
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அதிமுக சார்பில் சி.த செல்ல பாண்டியனும், ஸ்ரீவைகுண்டம் தொகுதி வேட்பாளராக சண்முகநாதனும் போட்டியிடுகின்றார்கள்.
இந்த நிலையில், தூத்துக்குடி எட்டையபுரம் சாலையில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தில் பாஜக தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமையில் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து, வேட்பாளர்கள் சி.த செல்ல பாண்டியனும், சண்முகநாதனும் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர்.. அப்போது அவர்கள் கூறுகையில், தமிழகத்தில் தற்போது நடக்கும் திமுக ஆட்சி ஒரு மக்கள் விரோத ஆட்சி, ஒரு தீய சக்தியின் ஆட்சி. இந்த ஆட்சியை மாற்ற வேண்டும் என்ற உறுதியுடன் தான் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) இந்த தேர்தலை சந்திக்கிறது.
பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், கடந்த 11–12 ஆண்டுகளில் இந்தியா உலக அளவில் உயர்ந்துள்ளது. உலகமே இந்தியாவை வியக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்த தலைமையின் வழிகாட்டுதலோடு, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆதரவுடன், தமிழகத்திலும் நல்லாட்சி கொண்டு வர வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.
மேலும், “அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், பாஜக உடன் வலுவான கூட்டணி அமைந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் இந்த கூட்டணி வெற்றி பெறும் சூழ்நிலை உள்ளது. தொண்டர்களை ஒருங்கிணைந்து செயல்பட்டால், 25,000 முதல் 30,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறலாம்.
கூட்டணி கட்சிகள் இடையே ஒருமித்த செயல்பாடு வலுவாக இருப்பதாகவும், எதிரணியில் குழப்ப நிலை நிலவுகிறது என்றும் சண்முகநாதன் குற்றம்சாட்டினார்.
tamilanda