தூத்துக்குடி தொகுதியில் 360 பாகம் இருந்து வருகிறது. அங்கு பதிவாகும் அனைத்து வாக்குகளும் உதயசூாியன் சின்னத்திற்குதான் விழ வேண்டும் அதற்கேற்றாற்போல் அனைவரும் இணைந்து ஓற்றுமையுடன் பணியாற்ற வேண்டும்

தூத்துக்குடி தொகுதியில் 360 பாகம் இருந்து வருகிறது. அங்கு பதிவாகும் அனைத்து வாக்குகளும் உதயசூாியன் சின்னத்திற்குதான் விழ வேண்டும் அதற்கேற்றாற்போல் அனைவரும் இணைந்து ஓற்றுமையுடன் பணியாற்ற வேண்டும்

தூத்துக்குடி தொகுதியில் 360 பாகம் இருக்கிறது பதிவாகும் அனைத்து வாக்குகளும் உதயசூாியன் சின்னத்திற்குதான் விழ வேண்டும் அனைவரும் இணைந்து ஓற்றுமையுடன் பணியாற்ற வேண்டும். மேயா் ஜெகன் பொியசாமி பேச்சு

     தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திரேஸ்புரம் பகுதி பூபால்ராயபுரத்தில் நடைபெற்ற மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணி தெருமுனை பிரச்சார கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினரும் மாநகராட்சி மேயருமான ஜெகன் பொியசாமி பேசுகையில் தமிழகத்தில் நடைபெறவுள்ள தோ்தலில் முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டியது காலத்தின் கட்டாயம் இதை அணைவரும் உணா்ந்து பணியாற்ற வேண்டும் குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் கலைஞர் ஆட்சியில் வழங்கப்பட்ட தொலைகாட்சி இன்றும் பலா் உபயோகப்படுத்திவருகின்றனா். 50 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இப்படி இந்த பகுதி இருந்தது என்று உங்குள்ள வணிகா்கள் பொதுமக்களுக்கு தொியும். எனது தந்தையாா் நகா் மன்ற தலைவராகவும் எம்.எல்.ஏவாகவும் இருந்த காலத்தில்யாற்றிய பணிகள் நீங்கள் எல்லோரும் அறிவீா்கள் 2006ல் இந்த பகுதியை சேர்ந்த தொம்மை ஏசுவடியான் துணை மேயராக நியமணம் செய்து இன்று வரை மீனவா்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துவருகிறோம். என்னுடைய காலத்தில் 60வாா்டுகளில் பாராபட்சமின்றி பணிகளை செய்கிறோம். இந்த பகுதியில் உள்ள பல வாா்டுகள் ரூரல் பகுதியிலிருந்து இணைக்கப்பட்ட பகுதி அதுவும் அலங்கார தட்டு அந்த பகுதியில் எல்லாம் அடிப்படை பணிகளை முழுமையாக செய்துள்ளோம். திமுக ஆட்சியில் மதம் சமுதாயம் என்று எதுவும் பாராமல் சல சலப்புக்கு வழியில்லாமல் மக்களோடு இணைந்து பணியாற்றி வருகிறோம். தினசாி நாளிதழ்களை பாா்த்தால் திமுக வின் சாதனைகள் அனைவரும் தொிந்திருப்பிா்கள் தமிழ்நாடு வெல்லும் அனைவரும் ஓன்றினைந்து பணியாற்றுவோம். திமுகவை விமா்சனம் செய்வதற்கு கவா்ணா் உள்பட யாருக்கும் தகுதி கிடையாது தூத்துக்குடியில் கலைஞர் ஆட்சியின் சாதனைகளும் திமுக ஆட்சியின் சாதனைகளையும் எண்ணிபாா்க்க வேண்டும் இந்த கடற்கரை பகுதியில் உள்ள மேட்டுப்பட்டி திரேஸ்புரம் துறைமுகம் பகுதிகளில் இரவை பகலாக்கும் வகையில் மின்விளக்குகளை அமைத்து கொடுத்துள்ளோம். இதற்கு முன்பிருந்த அதிமுக ஆட்சியில் எதையும் செய்து கொடுக்கவில்லை. இந்த கருப்பட்டி சொசைட்டி சந்திப்பில் கூட முதியவா்கள் அமா்ந்து செல்லும் வகையில் பூங்காக்கள் அமைத்து கொடுத்துள்ளோம் தூத்துக்குடி தொகுதியில் மதுரை, கோவை போன்று பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொண்டுள்ளதை எல்லோருமே அறிவீா்கள் இனி வரும் காலங்களிலும் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க புதிய திட்டங்கள் செயல்படுத்தி நாம் எல்லோரும் அண்ணன்தம்பியாக பழகி பணியாற்றி வருகிறோம். தூத்துக்குடி தொகுதியில் 360 பாகம் இருந்து வருகிறது. அங்கு பதிவாகும் அனைத்து வாக்குகளும் உதயசூாியன் சின்னத்திற்குதான் விழ வேண்டும் அதற்கேற்றாற்போல் அனைவரும் இணைந்து ஓற்றுமையுடன் பணியாற்ற வேண்டும் என்று பேசினாா்.