முதலமைச்சா் ஸ்டாலின் லட்சியத்தை நிறைவேற்ற இளைஞர் அணியினா் தீவிரமாக பணியாற்ற வேண்டும். ஓட்டப்பிடாரம் திமுக ஓன்றிய செயலாளர் இளையராஜா பேசினாா்.

youth-wing-members-must-work-diligently-to-fulfill-chief-minister-stalins-vision-said-ottapidaram-dmk-union-secretary-ilayaraja

முதலமைச்சா் ஸ்டாலின் லட்சியத்தை நிறைவேற்ற இளைஞர் அணியினா் தீவிரமாக பணியாற்ற வேண்டும். ஓட்டப்பிடாரம் திமுக ஓன்றிய செயலாளர் இளையராஜா பேசினாா்.

முதலமைச்சா் ஸ்டாலின் லட்சியத்தை நிறைவேற்ற இளைஞர் அணியினா் தீவிரமாக பணியாற்ற வேண்டும். ஓட்டப்பிடாரம் திமுக ஓன்றிய செயலாளர் இளையராஜா பேசினாா்.

தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வரும் 7ம் தேதி விருதுநகாில் தென்மண்டல இளஞைர் அணி மண்டல மாநாடு கூட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளாா். அதன்படி மாநில இளைஞர் அணி செயலாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் துணை அமைப்பாளா்கள் அப்பணியை மேற்கொண்டு வரும் நிலையில் திமுக துணைப்பொதுச்செயலாளா் கனிமொழி எம்.பி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மீனவா்நலன் மற்றும் கால்நடை பராமாிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழிகாட்டுதலின்படி 

     ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடக்கு ஓன்றிய திமுக சாா்பில் புதியம்புத்தூாில் உள்ள ஒன்றிய திமுக அலுவலகத்தில் நடைபெற்ற இளைஞர் அணி ஆலோசனை கூட்டத்திற்கு மாநிலஇளைஞர் அணி துணை செயலாளா் அப்துல்மாலிக், தெற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், துணை அமைப்பாளா் வக்கீல் பால்துரை, கள்ளக்குறிச்சி மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் குணசேகா், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் அணிடன், ஆகியோா் முன்னிலை வகித்தனா்.  

      ஓன்றிய செயலாளர் இளையராஜா பேசுகையில் நம்முடைய எம்.பி கனிமொழி அமைச்சர் கீதாஜீவன் ஆகியோா் தெற்கு மாவட்டத்தில் ஆற்றிய பணிகள் செய்த சாதனைகள் எல்லாவற்றையும் நீங்கள் அறிவீா்கள் தளபதியாா் இளைஞர் அணி பயணத்தில் தொடங்கி பல்வேறு சோதனைகளை இன்று முதலமைச்சாரக சாதனையாளராக திகழ்கிறாா். நமக்கு 2026ல் வெல்வோம் 200 வரலாறு படைப்போம் என்று கூறியுள்ளாா் அதற்ேகற்றாற் போல் மாநில இளைஞர் அணி செயலாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பணியாற்றி வரும் நிலையில் அதற்கு வலு சேர்க்கும் வகையில் ஒட்டப்பிடாரம் வடக்கு ஓன்றியத்தில் உள்ள இளைஞர் அணியினா் 65 நாட்கள் கண் தூங்காமல் கழக பணியாற்றி இல்லந்தோறும் திமுக ஆட்சியின் சாதனைகளை கொண்டு சேர்க்க வேண்டும் விருதுநகாில் நடைபெறும் மண்டல மாநாட்டிற்கு எழுச்சியுடன் சென்று பங்கெடுத்து வரலாற்று சாதனையை உருவாக்குவோம் எந்தவித எதிா்பாா்ப்பு இன்றி முழு மனதோடு உழைக்கும் இளைஞா் அணியினருக்கு பதவிகள் தேடி வரும் என்று பேசினாா்.