முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகள் வளர்ச்சியடைந்து வருகிறது. மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்

according-to-chief-minister-stalins-guidance-the-thoothukudi-corporation-areas-are-developing-mayor-jegan-periyasamy-informed-this

முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகள் வளர்ச்சியடைந்து வருகிறது. மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்

      தூத்துக்குடி நகராட்சியாக இருந்த நிலையில் 2008ம் வருடம் ஆகஸ்ட் 5-ல் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாட்டின் 10வது மாநகராட்சியாக தூத்துக்குடி தரம் உயர்த்தப்பட்டது. இதில் முத்தையாபுரம், அத்திமரப்பட்டி, மீளவிட்டான், சங்கரபேரி, தூத்துக்குடி ரூரல் ஆகிய 5 ஊராட்சிகளை இணைத்து தூத்துக்குடி மாநகராட்சியாக முதலமைச்சர் மு.கருணாநிதி நேரில் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். 

     அதன்பின் சில ஆண்டுகள் பல பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் எந்த பணிகளும் நடைபெறாத நிலையில் 2021ல் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் ஏற்பட்ட கடும் மழை வெள்ளத்தால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அப்போது எதிர்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் ராம்நகர், முத்தம்மாள் காலனி, பிரையண்ட் நகர், உள்ளிட்ட பல பகுதிகளை நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் 2021ல் நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் திமுக தனிப்பெரும்பாண்மையுடன் வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சியமைந்தது. 

      அதன்பின் நடைபெற்ற உள்ளாட்சி தோ்தலில் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடைபெற்ற தேர்தலில் 60 வார்டுகள் உள்ளடக்கிய பகுதியில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி 53 வார்டுகளில் வெற்றி வாகை சூடியது. இதனையடுத்து திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினால் மேயர் வேட்பாளராக 20வது வாா்டில் தோ்ந்ெதடுக்கப்பட்ட மேயா் ஜெகன் பொியசாமி தூத்துக்குடி மாநகராட்சி மேயராக 2022ம் ஆண்டு மார்ச் 4ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். 

     இந்நிலையில் மாநகராட்சி வளர்ச்சி பணிகள் குறித்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ஆணையா் ப்ாியங்கா, மேயா் ஜெகன் பொியசாமி பொறியாளர் தமிழ்செல்வன் உள்ளிட்டோா் கலந்து கொண்ட பின் 48 மாத காலத்தில் ஆற்றிய பணிகள் குறித்து மேயர் ஜெகன் பெரியசாமி கூறுகையில்: கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் பொதுமக்கள் நலன் கருதி எந்த அடிப்படை பணிகளையும் முறையாக செய்யவில்லை. தூத்துக்குடி மாநகராட்சி என்பது மிகப்பெரிய தொழில் நகரமாகும் குறிப்பாக விமான போக்குவரத்து, துறைமுகம், இரயில்வே, சாலை போக்குவரத்து என நான்கு கட்டமைப்புகளும் ஒருங்கிணைந்து அமைந்திருப்பதால் உள்நாடு, வெளிநாடு வர்த்தகம் நிறைந்த பகுதியாக இருப்பதால், எல்லா நாடுகளையும் சோ்ந்த தரப்பினரும், வந்து செல்லும் தன்மைக்கேற்ப கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள முதலில் முடிவு செய்தோம். அதன்படி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதாஜீவன், வழிகாட்டுதலின்படி எந்த பணிகளுக்கு முக்கியத்தும் அளிக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு முதல்கட்டமாக பள்ளி, கல்லூரி, வழிபாட்டுத்தலங்கள் பகுதிகளில் தரமான சாலை வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தோம். பின்னர் போக்குவரத்து நெருக்கடிகளை குறைக்கும் வகையில் வி.இ.ரோடு, அண்ணாநகர் மெயின்ரோடு இருபுறமும் பேவர் பிளாக் பதிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் இலகு ரக, நான்கு சக்கர வாகனமும், இரு சக்கர வாகனமும் நிறுத்திக் கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்துள்ளோம். சில முக்கிய சாலைகளில் எண்ட் டூ எண்ட் என்ற முறைப்படி மாசு இல்லாத மாநகரை உருவாக்கும் வகையில் இருபுறமும் பேவர் பிளாக் பதிக்கப்பட்டு பிரதான சாலைகள் தார் சாலைகள் மூலம் முறைப்படுத்தியுள்ளோம். கடந்த காலங்களில் மழை நீர் தேங்கிய பகுதிகளில் மீண்டும் அதே போல் நிலை வரக்கூடாது என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு சென்ற இடங்களில் மழைநீர் தேங்காத வகையில் கால்வாய் வழித்தடங்களை ஏற்படுத்தி அப்பகுதிகளில் புதிய சாலைகளை அமைத்துக் கொடுத்துள்ளோம். மழைநீர் கடலுக்குச் செல்லும் வகையில் 14 புதிய கால்வாய் வழித்தடங்களை ஏற்படுத்தி உள்ளோம். சுமார் 6 கி.மீ தூரத்திற்கு பக்கிள் ஓடை முழுமையாக தேவையற்ற கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டு சிலபகுதிகளில் விாிவாக்கம் செய்து வருகிறோம். கடந்த 2006 திமுக ஆட்சியில் கட்டப்பட்ட பக்கிள் ஓடையில்மூலம் புறநகா் பகுதியிலிருந்து வருகின்ற காற்றாட்டு வௌ்ளம் மழைநீா் கடலுக்கு செல்வதற்கு வசதியாக இருந்த காரணத்தால் மாநகர பகுதியில் பாதிப்புகள் ஏற்படவில்லை. தற்போது 10 செமீ மழைபெய்தாலும் எந்த பாதிப்பும் ஏற்பாடாது மழை நீர் தேங்கிய பகுதியில் 2 மணி நேரத்தில் வழிந்தோடிவிடும்.  

     மாநகராட்சி எல்லைக்குட்பட்ட 60 வார்டு பகுதிகளில் பயன்பாட்டில் இருந்து வந்த 18226 தெருவிளக்குகள் 15வது சிஎப்சி திட்டத்தின் கீழ் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 2887 மற்றும் இதர திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள தெருவிளக்குகள் என சேர்த்து தற்சமயம் மொத்தம் 21759 தெருவிளக்குகள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. கடந்த காலத்தை போல் அதிகனமழை பெய்தாலும், பல வழிகளில் தண்ணீர் ஊருக்குள் வருவதை தடுக்கும் வகையில் அதற்கான கட்டமைப்புகளையும் உருவாக்கி உள்ளோம். கோரம்பள்ளம் குளம் நிரம்பி முள்ளக்காடு, முத்தையாபுரம் வழியாக கடலுக்குச் செல்லும் 12 கி.மீ தூரம் வழித்தடம் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாநகர பகுதிகளில் பழைய பூங்காக்கள் சீரமைக்கப்பட்டும் புதிதாக இரண்டு மகளிா்கான பூங்காக்கள் உருவாக்கப்பட்டு 53பூங்காக்கள் நடைமுறையில் இருந்த வருகின்றன.  அதன் மூலம் சிறுவா்கள் முதல் முதியவா்கள் வரை பல்வேறு வகையில் அனைத்து தரப்பினரும் பயனடைந்து வருகின்றனர். மொத்தத்தில் 206 பூங்காக்கள் செயல்பாட்டிற்கு வரும். சில ஆண்டுகளாக செயல்படாமல் இருந்த படகுகுழாம் செயல்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளோம். 

தற்போது பொதுமக்கள் அதிகம் வந்தும் செல்லும் பகுதிகளில் புதிதாக 420 சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதற்கு அடுத்த கட்டமான 600 சாலைகள் 31 கோடியில் அமைக்கப்பட உள்ளது. 50 வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டுள்ள பைப் லைன் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. தற்போதுள்ள சாலை உயரத்திற்கு ஏற்றாற்போல் 8 அடி, 9 அடி ஆழத்தில் புதிய கருப்பு மற்றும் ப்ளு பைப் மூலம் நல்லமுறையில் மக்களை பாதிக்காத வகையில் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. அதன் மூலம் இரண்டு மாடிகள் வரை தண்ணீர் பொதுமக்களுக்கு கிடைக்கிறது. வல்லநாட்டிலிருந்து வந்து கொண்டிருந்த 1வது மற்றும் 2வது பைப் லைன் உடைப்பு ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளதால் அது முழுமையாக செயல்படாமல் 3வது மற்றும் 4வது பைப் லைன் மூலம் தான் இங்கு தண்ணீர் வருகிறது. 32 நீர்தேக்கம் தொட்டிகளுக்கு வரும் நீாின் மூலம் அப்படியிருந்தும் தினசரி பல பகுதிகளுக்கு தண்ணீர் வழங்கிக் கொண்டு வருகிறோம். 

    60 வார்டு பகுதிகளிலும் உள்ள அனைத்து கால்வாய்களில் தேங்கியுள்ள மணல் திட்டுகள், கழிவுகள் முழுமையாக அகற்றப்பட்டுள்ளன. எதிர்வரும் காலங்களில் மழை பாதிப்பு இருக்க கூடாது என்பதை கருத்தில் கொண்டு தான் அப்பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சிறிய குறுகளான பகுதி முழுவதும் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. பிளாஸ்டிக் கேரி பேக், கப் போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தாமல் அனைவரும் எதிர்கால தலைமுறையினர் நலன் கருதி தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் 12 உயா்கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதியில் 7 சுகாதார அலுவலகமும் 15 நகா் நல அலுவலகமும் பொதுமக்களின் நலன் கருதி சுகாதாரத்தை பேணி பாதுகாக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. தினசாி 180 டன் குப்பைகள் 2000 பணியாளா்களை கொண்டு சேகாிக்கப்பட்டு 120 டன் மறுசூழற்சி முறையில் வருகிறது. அதில் தேவையற்ற சில பிளாஸ்டிக் உள்ளிட்டவைகளை தனியாா் நிறுவனத்திற்கு  ஒப்பந்த அடிப்படையில் மின்சார உற்பத்திக்கு எடுத்துச்செல்கின்றன. தருவைகுளம் குப்பைகிடங்கு 578 ஏக்காில் உள்ளது. அதில் 300 ஏக்காில் மரக்கன்றுகள் நடப்பட்டு கழிவுநீர் சுத்திகாிக்கப்பட்டு அதை பயன்படுத்தி அந்த இடம் பூஞ்சோலையாக மாறி இருக்கிறது. மேலும் 100 ஏக்காில் மரக்கன்றுகள் நடும் திட்டமும் கவனத்தில் இருக்கிறது. மாசு இல்லாத மாநகராட்சியை உருவாக்கிட வீட்டுக்கு ஓரு மரம் வளர்த்து சுகாதாரத்தை எல்லோரும் பேணி பாதுகாத்து தமிழகத்தில் உள்ள மாநகராட்சியில் தூத்துக்குடி சிறந்த மாநகராட்சியாக உருவாக்குவதுதான் எங்களது லட்சியம் இதற்கு பொதுமக்கள் அனைவரும் ஓத்துழைப்பு வழங்க வேண்டும். 

     மேற்கண்ட எல்லா பணிகளுக்கும் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி வளர்ச்சிப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து உறுதுணையாக இருந்தமைக்கு மாநகராட்சி சாா்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று மேயர் ஜெகன் பெரியசாமி புகழராம் சூட்டினார்.