தூத்துக்குடி மாவட்ட சதுரங்க கழகத்தின் தடை உத்தரவு சட்ட விரோதம் :முன்னாள் சர்வதேச சதுரங்க வீரர்கள் மீது விதிக்கப்பட்ட இரண்டாண்டு தடை ரத்து – தூத்துக்குடி முன்சீப் நீதிமன்றம் தீர்ப்பு

the-ban-order-issued-by-the-thoothukudi-district-chess-association-is-illegal-the-two-year-ban-imposed-on-former-international-chess-players-has-been-revoked-–-thoothukudi-munsiff-court-ruling

தூத்துக்குடி மாவட்ட சதுரங்க கழகத்தின் தடை உத்தரவு சட்ட விரோதம் :முன்னாள் சர்வதேச சதுரங்க வீரர்கள் மீது விதிக்கப்பட்ட இரண்டாண்டு தடை ரத்து – தூத்துக்குடி முன்சீப் நீதிமன்றம் தீர்ப்பு

தூத்துக்குடி | பிப்ரவரி 1, 2026

தூத்துக்குடி மாவட்ட சதுரங்க கழகம், முன்னாள் சர்வதேச சதுரங்க வீரர்களான பிரேம்குமார் மற்றும் முருகேசன் பாண்டியன் மீது விதித்த இரண்டு ஆண்டுகள் தடை உத்தரவு செல்லாது, சட்ட விரோதம் என தூத்துக்குடி மாவட்ட முன்சீப் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

????‍⚖️ நீதிமன்றத்தின் தெளிவான கண்டனம்

கடந்த 2018 ஆம் ஆண்டு, பள்ளி மாணவ–மாணவிகளுக்காக நட்பு ரீதியான செஸ் போட்டிகளை நடத்தினர் என்ற காரணத்தை முன்வைத்து,

கற்பகவல்லி (செயலாளர்)

ஜோ பிரகாஷ் (தலைவர்)

ஆகியோர், எந்த விதமான சட்டபூர்வ நடைமுறையும், இயற்கை நீதியின் அடிப்படையும் பின்பற்றாமல், இருவரையும் செஸ் விளையாட, போட்டி நடத்த, நடுவராக செயல்பட முழுமையாக தடை செய்தனர்.

இந்த தடை உத்தரவை எதிர்த்து O.S.No.66/2019 என்ற வழக்கை பிரேம்குமார் மற்றும் முருகேசன் பாண்டியன் தாக்கல் செய்தனர். வழக்கை விரிவாக விசாரித்த நீதிமன்றம்,

> சதுரங்க கழகத்தின் உள் விதிகள் (Bye-laws) முற்றிலும் மீறப்பட்டுள்ளன,

நிர்வாகக் குழுவிற்கு (Executive Committee) உரிய அதிகாரம் இல்லாமல்,

அவசர பொதுக்குழு கூட்டத்தில் (EGM) தடை விதிக்கப்பட்டுள்ளது,

இது சட்டப்படி செல்லாது (Null and Void)

என்று கடுமையாகக் கண்டனம் தெரிவித்துள்ளது.

???? தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்

தடை விதிக்கப்பட்ட தீர்மானம் சட்ட ரீதியாக அமுலற்றது

வீரர்கள் மீது விதிக்கப்பட்ட தடை முழுமையாக ரத்து

இனி அவர்களை செஸ் விளையாட, போட்டி நடத்த, நடுவராக செயல்பட எவரும் தடுக்க முடியாது

கழக நிர்வாகம் இயற்கை நீதியை மீறியுள்ளதாக நீதிமன்றம் பதிவு

இந்த தீர்ப்பு, சங்க நிர்வாகங்களின் தன்னிச்சையான நடவடிக்கைகளுக்கு எதிரான முக்கிய சட்ட முன்னுதாரணமாக கருதப்படுகிறது 

????️ பிரேம்குமார் – முன்னாள் சர்வதேச செஸ் வீரர் கருத்து

தீர்ப்பு குறித்து பேசிய பிரேம்குமார்,

> *“நீதிமன்றம் எங்களுக்கு நீதி வழங்கியுள்ளது.

உடனடியாக தமிழ்நாடு சதுரங்க கழகம் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போது தூத்துக்குடி மாவட்ட சதுரங்க கழகத்தில் 50 சதவீதம் செஸ் வீரர்கள் இல்லாதவர்கள் பதவியில் உள்ளனர்.

இந்த சங்கத்தை கலைத்து, உண்மையான செஸ் வீரர்களை கொண்டு *புதிய நிர்வாகத்தை அமைக்க வேண்டும்”

என்று கடுமையான கோரிக்கையையும் முன்வைத்தார்.

♟️ செஸ் உலகில் அதிர்வலை

இந்த தீர்ப்பு,

மாவட்ட / மாநில சதுரங்க சங்கங்களில் நடைபெறும் அதிகார துஷ்பிரயோகங்களுக்கு எதிரான எச்சரிக்கையாகவும்,

வீரர்களின் உரிமைகளை பாதுகாக்கும் முக்கிய தீர்ப்பாகவும்

செஸ் உலகில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.