வடை சமோசா உணவுப் பொருள்கள் செய்தித்தாள்களில் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

strict-action-is-being-taken-against-those-selling-vada-and-samosa-food-items-wrapped-in-newspapers

வடை சமோசா உணவுப் பொருள்கள் செய்தித்தாள்களில் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ் உத்தரவின் பெயரில் மாவட்ட முழுவதும் நியூஸ் பேப்பரில் வைத்து பலகாரங்கள் எண்ணெய் பலகாரங்கள் உணவு பலகாரங்கள் போன்றவற்றை நியூஸ் பேப்பரில் வைத்து பொதுமக்களுக்கு வழங்க கூடாது என்கின்ற உத்தரவை பிறப்பித்தார். இந்த நிலையில் கடந்த எட்டு ஆண்டுகளாக டீக்கடைகள் வடை சமோசா போன்ற பலகாரங்கள் உள்ள கடைகளில் வெள்ளை பேப்பரில் தான் வடை சமோசா பஜ்ஜி போன்ற உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது இந்த நிலையில் தூத்துக்குடிக்கு அருகில் உள்ள வாகைக்குளம் பகுதி இன்று ஆய்வு செய்யப்பட்டது. பத்து உணவு வணிக நிறுவனங்கள் (4 தேநீர்க் கடைகள், 2 பழக்கடைகள், 2 உணவகங்கள், 2 பேக்கரிக் கடைகள்) ஆய்வு செய்யப்பட்டன. ஆய்வின்போது விதிமீறல்கள் கண்டறியப்பட்டன. பிரிவு 26, 27-இன் கீழ் 2 அறிவிப்புகள் வழங்கப்பட்டன. உணவுப் பொருட்களுடன் செய்தித்தாள்களைப் பயன்படுத்தியதற்காக, படிவம் II-இன் கீழ் 2 பறிமுதல் குறிப்பாணைகள் வழங்கப்பட்டு, அபராதம் விதிக்கப் பரிந்துரைக்கப்பட்டது.