கல்வி சம்மந்தமான பிரச்சனைகள், பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் சம்மந்தமான பிரச்சனைகளுக்கு நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் மனு கொடுத்து எந்த வித கட்டணமும் இல்லாமல் தீர்வு காணலாம் : தூத்துக்குடி மாவட்ட நீதிபதி தகவல்

people-can-find-solutions-to-education-related-problems-and-issues-concerning-their-basic-needs-by-filing-a-petition-at-the-permanent-lok-adalat-peoples-court-without-any-fees-tuticorin-district-judge-informs

    கல்வி சம்மந்தமான பிரச்சனைகள், பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் சம்மந்தமான பிரச்சனைகளுக்கு நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் மனு கொடுத்து எந்த வித கட்டணமும் இல்லாமல் தீர்வு காணலாம் : தூத்துக்குடி மாவட்ட நீதிபதி தகவல்       தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர், நடுவைக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த சுடலைமணி அவர்களின் மகள் செல்வி. கேமலா தேவி என்ற மாணவி தூத்துக்குடி மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றத்தின் முன்பாக தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு AIM Technical பயிற்சி மையத்தில் உள்ள எனது கல்வி அசல் சான்றிதழ்களான 10th, 11th & 12th marksheets,  Provisional certificate மற்றும் சாதி சான்றிதழ் ஆகிய 5 அசல் சான்றிதல்களை பெற்று தரவேண்டி மனு செய்திருந்தார். அந்த மனுவை இன்று 30.01.2026 விசாரணை செய்த மாண்புமிகு முதன்மை மாவட்ட நீதிபதி/தலைவர்  R.வசந்தி, M.L., நிரந்தர மக்கள் நீதிமன்றம், தூத்துக்குடி,மனுதாரர் மற்றும் Tamilnadu AIM Technical Training Centre அதிகாரிகளுக்கு அறிவிப்பு அனுப்பியதன் அடிப்படையில் இன்று இருதரப்பினரும் ஆஜர் ஆகினார்கள். விசாரணயில் மேற்படி கல்லூரி மாணவியின் அசல் கல்வி சான்றிதழ்களை நிரந்தர மக்கள் நீதிமன்றத்தின் முன்பாக மாணவியிடம் ஒப்படைக்கப்பட்டது.  இதன் மூலம் மாணவி கேமலா தேவி மனு முடித்துவைக்கப்பட்டது. மேலும் மாண்புமிகு தலைவர் / முதன்மை மாவட்ட நீதிபதி அவர்கள்  இதுபோன்ற கல்வி சம்மந்தமான பிரச்சனைகள், பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் சம்மந்தமான பிரச்சனைகளுக்கு நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் மனு கொடுத்து எந்த வித கட்டணமும் இல்லாமல் தீர்வு காணலாம் என்று தெரிவித்தார்.