குடும்பத்தில் நங்கூரமாக இருந்து பெண்கள் வழிநடத்துகிறாா்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கி அமைச்சர் கீதாஜீவன் பேசினாா்.
women-act-as-anchors-in-the-family-and-provide-guidance-said-minister-geetha-jeevan-while-distributing-welfare-assistance
குடும்பத்தில் நங்கூரமாக இருந்து பெண்கள் வழிநடத்துகிறாா்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கி அமைச்சர் கீதாஜீவன் பேசினாா்.

தூத்துக்குடி திமுக துணை பொது செயலாளரும், நாடாளுமன்ற குழுதலைவருமான கனிமொழி எம்.பி பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தூத்துக்குடி, கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது. மாநகர மகளிரணி அமைப்பாளர் ஜெயக்கனி வரவேற்றார்.
வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் 151 பெண்களுக்கு தையல் மிஷின்களை வழங்கி பேசுகையில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் இதுவரை 10 ஆயிரம் பேருக்கு தையல் இயந்திரம் வழங்கியுள்ளேன். மீதமுள்ள விண்ணப்பதாரர்களுக்கும் விரைவில் வழங்கப்படும். முன்னரெல்லாம் வாக்களிப்பதற்கு ஆண்களுக்கு மட்டுமே வாக்குரிமை இருந்தது. 1920ல் பெண்களுக்கும் போராடி வாக்குரிமை கிடைத்தது. 1989ல் பெண்களுக்கு சொத்தில் சமஉாிமை வழங்கியது கலைஞர் ஆட்சியில் தான் பெண்கள் ஏன் படிக்க வேண்டும் என்று ஆண்களை மட்டும் தான் முன்னர் படிக்க வைத்தார்கள். அதனை மாற்றியது திமுக தான். தமிழ்நாடு முற்போக்கு மாநிலமாக முன்னேறி வருகிறது. அனைத்து பெண்களும் படிக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். பள்ளி படிப்பு மட்டுமின்றி கல்லூரியும் படிப்போம் என்று பெண்கள் விரும்புகின்றனர். தொழில் தொடங்க பெண்களுக்கு 10 லட்சம் கடன் வழங்கப்படுகிறது அதில் 7.5 லட்சம் கட்டினால் போதும் 2.5 லட்சம் மானியம், அதே போல் ஆண்களுக்கும் வழங்கப்படுகிறது. தொழில் அதிபர்களாக வர வேண்டும் என்று திமுக ஆட்சியில் பயிற்சி அளித்து வருகிறோம். அதிக பெண் தொழிலதிபர்கள் இருப்பது தமிழ்நாட்டில் மட்டும்தான். தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி, பணப்புழக்கம் உள்ளது. இந்த நிலையை மாற்றியது திமுகதான். எல்லோருக்கும் உடல்நலம் ஆரோக்கியம் முக்கியம் அதற்கு சத்தாண உணவுகளை சாப்பிட வேண்டும். ஒன்றிய அரசு பல்வேறுவகையில் தமிழகத்தை வஞ்சித்தாலும் முதலமைச்சா் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி வருகிறாா்.
மாநகராட்சி பகுதியில் கடந்த அதிமுக ஆட்சியில் குடிநீர் வசதி, சாலை வசதி, மழைநீர் வடிகால் வசதி இல்லாமல் இருந்தது. ஆனால் திமுக ஆட்சியில் அனைத்து வசதிகளும் உள்ளது. ரேஷன் கடையில் தரமான அரிசி தரமான பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஒரு சிலர் தேர்தலுக்கு மட்டுமே மக்களை சந்திக்க வருவார்கள். நீா்குமிழி போல் காணமல் போய்விடுவாா்கள் தோ்தலுக்கு பின் புதிதாக கட்சியை ஆரம்பித்து ஒரு மாயயை உருவாக்கி வைத்து இருக்கிறார்கள். ஆனால் திமுக மக்களோடு மக்களாக இருக்கிறது ஓரு குடும்பத்தில் நங்கூரமாக இருந்து பெண்கள் பணியாற்றுவதால் குடும்பமே வளர்ச்சியடைகிறது. என்று பேசினாா்.
மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட துணைச்செயலாளர் ராஜ்மோகன் செல்வின், மாநில பொறியாளர் அணி துணைச்செயலாளர் அன்பழகன், மாநில பேச்சாளா் சரத்பாலா, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கவிதாதேவி, மண்டல தலைவர் வக்கீல் பாலகுருசுவாமி, பகுதிச்செயலாளர்கள் மேகநாதன், ஜெயக்குமார், தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர்கள் பிரபு, அருணாதேவி, மாவட்ட மருத்துவ அணி தலைவா் அருண்குமாா், மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப், மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண் சுந்தர், துணை அமைப்பாளர் ரவி, கவுன்சிலர்கள் வைதேகி, சுப்புலட்சுமி, விஜயகுமாா், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார் பகுதி அணி அமைப்பாளா்கள் சந்தன முனிஸ்வரன் வட்டப்பிரதிநிதி பாஸ்கா், மற்றும் மணி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பாக்ஸ்: மாநில பேச்சாளா் சரத்பாலா பேசுகையில் கடந்த தோ்தலில் திமுகவிற்கு 2 கோடியே 9 லட்சம் வாக்குகள் கிடைத்துள்ளன. திமுக கூட்டணி 159 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்த ஆட்சியில் 3 கோடி போ் அரசு திட்டத்தின் மூலம் பயன் அடைந்துள்ளனா். ஓரு கோடியே 31 லட்சம் போ் மகளிா் உாிமைத்தொகை பெறுகின்றனா். இதை வைத்து பாா்த்தால் 220 ெதாகுதிகளில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும். தளபதியாரால் பெண்சிங்கம் என்ற அழைக்கப்பட்ட அமைச்சர் கீதாஜீவன் உங்களுக்காக தினமும 20மணி நேரம் உழைக்கிறாா். அவா்களின் வெற்றிக்காக வரும் தோ்தலில் தினசாி ஓரு மணிநேரமாவது நலத்திட்ட உதவிகள் பெற்றுக்கொண்ட பெண்கள் ஆட்சியின் சாதனைகளை மற்றவா்களிடம் எடுத்துக்கூறி வரும் தோ்தலில் திமுகவிற்கு துணையாக இருக்க வேண்டும். எதிா்கால தலைமுறையினாின் நலன் கருதி ஓன்பது வயது முதல் 14 வயது வரை உள்ளவா்களுக்கு தற்போது அந்த நோய் தாக்கம் இல்லாமல்இருப்பது அரசின் சாா்பில் ஊசி போடப்படுகிறது. அதன் விலை 28 ஆயிரம் இவா்களுக்கு வாக்கு கிடையாது. எதிா்கால தலைமுறையினா் நலன் முக்கியம் என்று முதலமைச்சர் பணியாற்றுகிறாா். என்று பேசினாா்.
admin