கோடி அற்புதர் புனித அந்தோனியார் திருவிழா தொடக்கம்

கோடி அற்புதர் புனித அந்தோனியார் திருவிழா தொடக்கம்

புளியம்பட்டி புனித அந்தோனியார் ஆலய கொடியேற்றும் திருவிழா நடந்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த கிறிஸ்தவ ஆலயங்களில் புளியம்பட்டி புனித அந்தோனியார் ஆலயமும் ஒன்றாகும், ஆலயத்தில் இந்த ஆண்டு திருவிழா 29ம் தேதி மாலை வியாழக்கிழமை 5.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. மறைவட்ட அதிபர் அந்தோணி வியாகப்பன் தலைமையில் அருட்தந்தையர்கள் திருப்பலி நற்கருணை ஆசீர் நடைபெறுகிறது. தொடர்ந்து 13 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் திருப்பலி, மறையுறை, நற்கருணை ஆசீர் நடைபெறும். 12 ஆம் திருநாளான பிப்ரவரி 9ம் தேதி திங்கள்கிழமை மாலை 6:00 மணிக்கு பாளையங்கோட்டை மறை மாவட்ட முன்னாள் ஆயர் ஜூடு பால்ராஜ் தலைமையில் திருப்பலி நற்கருணை ஆசீர் நடைபெறுகிறது. தொடர்ந்து தேர் பவனி நடைபெறும். 13 ஆம் நாளான 10ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 11. 45 மணிக்கு மதுரை மாவட்ட முன்னாள் ஆயர் அந்தோணி பாப்புசாமி தலைமையில் திருவிழா திருப்பலி நடைபெறுகிறது. 11ம் தேதி காலையில் கொடி இறக்க நன்றி திருப்பலி நடைபெறும். விழா ஏற்பாடுகளை ஆலய அதிபரும் பங்கு தந்தையுமான மோட்ச ராஜன் உதவி பங்குத்தந்தை சந்தியாகு ஆன்மீக தந்தைகள் சகாய தாசன் பீட்டர் பிச்சைக்கண் மற்றும் அருட் சகோதரிகள், இறைமக்கள் செய்துள்ளனர்.