நம் நாடு நம் மக்கள் நம் எதிர்காலம் கட்சி ஆலோசனை கூட்டம்

our-country-our-people-our-future-party-consultative-meeting

நம் நாடு நம் மக்கள் நம் எதிர்காலம் கட்சி ஆலோசனை கூட்டம்

தூத்துக்குடி தமிழ்ச் சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் ‘நம் நாடு நம் மக்கள் நம் எதிர்காலம்’ கட்சியின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கட்சியின் தலைவர் பொன்குமரன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் அருணா தேவி ரமேஷ் பாண்டியன், துணைத் தலைவர் சிவா முத்துக்குமார், செயலாளர்கள் ரத்தினராஜா மற்றும் சுடலைமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் கட்சியின் 16 முக்கிய லட்சியங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக, லஞ்சம் மற்றும் ஊழலை ஒழித்தல், டாஸ்மாக் கடைகளை மூடுதல், கல்வி மற்றும் தொழில்களைப் பெருக்குதல், விவசாயத்தை மேம்படுத்துதல் மற்றும் நீர்நிலைகளைப் பாதுகாத்தல் போன்ற மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மேலும், ஜாதி-மத வேற்றுமைகளை அகற்றுதல், நவீன மருத்துவ வசதிகளை ஏற்படுத்துதல், நீதிமன்ற வழக்குகளைத் துரிதப்படுத்துதல் மற்றும் தேர்தல் முறைகளை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடத்தச் செய்தல் போன்ற லட்சியங்கள் குறித்துப் பேசப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கட்சியின் உறுப்பினர்களுக்குப் புதிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.